உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. குழந்தை மேல சத்தியம்.. ஏமாற்றிய வீரா.. குமுறிய பியூட்டிஷியன்!
காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்
சென்னை: "உன்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. இது நம்ம குழந்தை மேல சத்தியம்"ன்னு சொல்லி என்னை வீரா ஏமாற்றிவிட்டார் என்று பியூட்டிஷன் ஒருவர் போலீஸ்காரர் மீது புகார் அளித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரஸ்வதி என்ற 24 வயது இளம்பெண் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
"2017-ம் வருஷம் நான் போலீஸ் வேலையில் சேர முயற்சி செய்தேன்.. அதற்கான உடற்பயிற்சி செய்யும் கிரவுண்டுக்கு போகும்போதுதான் வீரமணியைச் சந்தித்தேன். காதல் வளர்ந்தது.. விரைவில் வீரமணி போலீஸ் வேலைக்கு தேர்வாகிவிட்டார்.. ஆனால், எனக்கு கிடைக்கவில்லை.

பெற்றோர்
நாங்கள் 2 பேரும் சினிமா, பார்க், பீச் என்று பல இடங்களுக்கு சென்றோம்.. 2018-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி, என்னை வீட்டுக்கு வரும்படி வீரமணி சொன்னார். அவருடைய பெற்றோரிடம் என்னை அறிமுகம் செய்து வைப்பதாக சொன்னார்.. அதை நம்பிதான் சென்றேன்.

கல்யாணம்
ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அதை பற்றி கேட்டதற்கு அம்மாவும் அப்பாவும் கோயிலுக்கு போயிருக்கிறார்கள் என்று வீரமணி கூறினார். அந்த நேரத்தில், என்னை கல்யாணம் செய்துகொள்வதாக தெரிவித்தார்.

வீரமணி
அவரின் அம்மா மீதும் என் மீதும் பிறக்கப்போகும் குழந்தை மீதும் வீரமணி சத்தியம் செய்தார். இதன்பிறகு நாங்கள் அங்கு சந்தோஷமாக இருந்தோம். இதற்கு பிறகு வீரமணி என்னுடன் சரிவரப் பேசவில்லை. அதை பற்றி கேட்டதற்கு கல்யாணத்துக்கு வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை.

புகார்
அதனால் கல்யாணம் செய்ய விரும்பவில்லை என்று சொல்லி, செல்போனில் என் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார். என்னை காதலித்து, கல்யாணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து ஏமாற்றிய போலீஸ்காரர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications