"ராத்திரி 12 மணிக்கு எங்க போயிட்டு வர்றே.. செத்து தொலை".. அதிர வைத்த ஆஷா.. உயிரை விட்ட வெங்கடேஷ்!

கள்ளக்காதலியால் எரித்து கொன்ற போலீஸ்காரர் முன்னதாக வாக்குமூலம் தந்தார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிர வைத்த ஆஷா.. உயிரை விட்ட வெங்கடேஷ்!

    சென்னை: "ராத்திரி 12 மணிக்கு எங்க போயிட்டு வர்றே.. நீயெல்லாம் உயிரோடவே இருக்ககூடாது.. செத்து தொலைடா" என்று பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து என் மேல ஊற்றி ஆஷா எரிச்சிட்டாள்" என்று கள்ளக்காதலி குறித்து வாக்குமூலம் தந்தார் போலீஸ்காரர்!

    சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். 30 வயதாகிறது. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2-ம் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர்.

    policeman confessed to chennai police

    திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த வெங்கடேசுக்கு ஆஷா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஆஷா ஏற்கனவே கல்யாணமாகி பிள்ளைகளை பெற்றவர். அவரும் அவர் குடும்பத்தை விட்டுவிட்டு, வெங்கடேசுடன் ஒரே வீட்டில் தம்பதி போல வாழ்ந்து வந்துள்ளனர்.

    ஆனால், வெங்கடேசுக்கு ஆஷா, தவிர வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக ஆஷாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு, அதனால் தகராறு வெடித்துள்ளது. அதனால், நடுராத்திரி 1 மணிக்கு ஆஷா, பெட்ரோலை எடுத்து வந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேஷ் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் உடம்பெல்லாம் தீ பரவியதால், வெங்கடேஷ் அலறி அடித்து கொண்டு, பாத்ரூமுக்குள் ஓடி, தண்ணீரை பக்கெட் பக்கெட்டாக எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டார். தீயை அணைப்பதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடிவந்து வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்தும் உயிரிழந்துவிட்டார். இறப்பதற்கு முன்னதாக, வெங்கடேசன் போலீசில் அளித்த வாக்குமூலம் இதுதான்: "என் சொந்த ஊர் விழுப்புரம், பொய்யப்பாக்கம். என் அப்பா கூலி வேலை செய்கிறார்... என் அம்மா சென்னை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளி. என்னை கஷ்டப்பட்டுதான் படிக்க வெச்சாங்க.. பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன்.

    விருப்பப்பட்டு போலீஸ் வேலையில் சேர்ந்தேன். ஸ்கூல் படிக்கும்போதே ஜெயாவை ரொம்ப விரும்பினேன். இருவரும் காதலிப்பது வீட்டுக்கு தெரிந்ததும், இரு வீட்டிலும் கல்யாணம் செய்து வைத்தனர். எங்களுக்கு ஒரு பொண்ணு, பையன் உள்ளனர். ஆனால், எங்களுக்குள்ள ஒத்துவராததால், பிரிந்துவிட்டோம்.. கோர்ட்டில் டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்கிறோம்.

    6 வருஷத்து முன்னாடி யூத் பிரிகேடராக புளியந்தோப்பு ஸ்டேஷனில் என்னுடன் வேலை பார்த்தவர், ஜோதிராமலிங்கம், இவரது மனைவி ஆஷாவுடன் எனக்கு பழக்கம் எற்பட்டது. இந்த விஷயம் தெரிந்ததும், ஜோதிராமலிங்கம், ஆஷாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். இதனால், மகளுடன் வசித்து வந்த என் வீட்டில் வந்து ஆஷா தங்கினார்.

    எனக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக ஆஷாவுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் தினமும் எங்களுக்குள் சண்டை வரும். 20 நாளைக்கு முன்னாடிகூட தகராறு வந்தது. மன உளைச்சலிலேயே இருந்தேன். போன 23, 24 ஆகிய தேதிகளில் லீவு எடுத்தேன்.. புளியந்தோப்பில் உள்ள என் பிரண்ட் வீட்டுக்கு போய்விட்டு, நைட் 12 மணிக்கு வந்தேன்.. அப்போ ஆஷா கோபமாக இருந்தாள்.

    "உனக்கு லீவுதானே.. எங்கே போய்ட்டு இந்நேரத்துக்கு வர்றே?" என்று கேட்டாள். பிரண்டு வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லியும் நம்பல.. அப்பறம் நான் தூங்க போய்ட்டேன்.. எப்போதான் என் மேல ஏதோ ஊற்றுவது போல இருந்தது.. பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்துட்டு வந்து என் மேல ஆஷா ஊற்றினாள்.. நான் அலறி எழுந்தேன்.. "நீயெல்லாம் உயிரோடவே இருக்க கூடாது.. செத்து தொலைடா" என்று சொல்லி தீ வைத்துவிட்டு வெளியே போய்விட்டாள்.

    உடம்பெல்லாம் எரிந்தது.. பாத்ரூம்பிற்குள் ஓடிப்போய் தண்ணீரை எடுத்து ஊற்றினேன்... அப்பவும் என்னால் எரிச்சல் தாங்க முடியாமல் அலறவும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து என்னை காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்கள்" என்றார். இதையடுத்துதான் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இப்போது ஆஷா சிறையில் உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+