வெளுத்துருச்சு விஜயின் சாயம்.. அதிமுகவுக்கும் நஷ்டம்? தவெகவுக்கு வாக்கு வங்கி இல்லையே: பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் என்பவருக்கு இங்கே தேவையில்லாமல் புது மவுசை உருவாக்குகிறார்கள்.. அதாவது இல்லாததை இருப்பதுபோல காட்டும் அரசியல் சூழ்ச்சியை எல்லாரும் சேர்ந்து உருவாக்குகிறார்கள்.. இப்படிப்பட்ட சினிமாத்தனம் அரசியலுக்குள்ளும் புகுத்தப்படுவது வருத்தமான விஷயம் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

Peralai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், கரூருக்கு சிபிஐ டீம் கிளம்பி சென்றுள்ளது.. இப்படி உடனடியாக விசாரணையை துவங்கி, உடனடியாக இந்த காய்களை நகர்த்துவது தேர்தலை நோக்கியா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு பரவலாக எழுந்துள்ளது.. அதை நிவர்த்தி செய்ய வேண்டும்..

TVK AIADMK

கரூர் சிபிஐ விசாரணை

அதேபோல சிபிஐ விசாரணை என்பதை விஜய் மீதான அழுத்தமாகவே நான் பார்க்கறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய்க்கான ஓட்டு உள்ளதால், அது திமுகவை தோற்கடிக்க உதவும் என்கிற அரசியல் கணக்கு இதில் இருக்கவே செய்கிறது.

ஆனால், இந்த கூட்டணி கணக்குக்கு விஜய் டிமிக்கி தந்துவிடுவார் என்பதே என்னுடைய பார்வை.. அது இப்போதைக்கு நடக்காது.. பிப்ரவரி, மார்ச் மாதத்தில்தான் நடக்கும்..அதுவரை இப்படி கரூர் விவகாரம் சுற்றலில் இருக்கும்.. அப்படி இருப்பதையும் தனக்கான அரசியல் லாபமாக கருதி கொள்வார் விஜய்.

இன்று அக்டோபர் 17ம் தேதி அதிமுக துவங்கி 54வது ஆண்டு நாளாகும்.. இதனை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மரியாதை செய்தார்.

அதிமுக எந்த சக்திக்கும் ஏங்கவில்லை என்று வீரவசனம் எடப்பாடி பழனிசாமி பேசினாலும், விஜய் கூட்டணிக்கு வந்துவிட மாட்டாரா? என்ற சந்தேகத்தில் அவர் உள்ளதாகவே தெரிகிறது.

அரசியல் சூழ்ச்சி - புது மவுசு

விஜய் என்பவருக்கு இங்கே தேவையில்லாமல் புது மவுசை உருவாக்குகிறார்கள்.. அதாவது இல்லாததை இருப்பதுபோல காட்டும் அரசியல் சூழ்ச்சியை எல்லாரும் சேர்ந்து உருவாக்குகிறார்கள்.. இப்படிப்பட்ட சினிமாத்தனம் அரசியலுக்குள்ளும் புகுத்தப்படுவது வருத்தமான விஷயம்.

கரூர் சம்பவம் நடந்த பிறகு, விஜய்யின் சாயம் வெளுத்திருக்கிறது.. காரணம், விஜய்யை ஏன் ஆதரிக்கிறோம் என்று தவெக ரசிகர்களே பேட்டிகளாக தருகிறார்கள்.. அந்த பேட்டிகள் இணையத்தில் சுற்றி கொண்டிருக்கிறது.. இதிலிருந்தே தவெகவினரின் அரசியல் போதாமை வெட்ட வெளிச்சமாகிறது. கட்டுப்பாடற்ற முறையில் தவெகவினர் நடந்து கொள்வதும், மக்களின் முன்பு சித்திரமாக பதிந்துவிட்டது.

கரூர் முன்பு - கரூர் பின்பு

கரூர் சம்பவத்துக்கு முன்பு, அடேங்கப்பா, விஜய்க்கு இவ்வளவு கூட்டம் வருதே? என்ற பிம்பம் அனைவரிடமும் இருந்தது. ஆனால், கரூருக்கு பின்பு,விஜய்க்கு கூட்டம் வருவதன் பின்னணி. அவர்கள் கட்டுப்பாடற்று, ஒழுங்கீனமான இருக்கிறதே? என்பது எண்ணம் வந்துவிட்டது. இவர்களை நம்பி எப்படி ஓட்டு போடுவது என்ற சிந்தனைக்கும் மக்கள் சென்றுவிட்டனர்.

எனவே கரூர் நிகழ்வு என்பது விஜய்க்கான நஷ்டமே.. விஜய்க்கு நஷ்டம் என்றால், அது அதிமுகவுக்கும் நஷ்டம்தான்..

அதிமுக ஒரு கூட்டத்தை நடத்துகிறது என்றால், அதற்கு செலவு செய்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதற்கெனவே கட்சியில் பொறுப்பாளர்கள் இருப்பார்கள். இதனால் எத்தனை முறை கூட்டம் நடத்தினாலும், அது கட்டுப்பாடாக இருக்கும்.. வன்முறை சம்பவம் நடக்கவே நடக்காது. 100 பேரை பொறுப்பாளர்கள் அழைத்து வருகிறார் என்றால் அந்த 100 பேருக்கும், கட்சியின் பொறுப்பாளர்களே, முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.

விஜய்க்கு ஓட்டு வங்கியே கிடையாது

ஆனால், விஜய் கட்சியில் அப்படியில்லை.. 50 ஆயிரம் பேர் கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த பொறுப்பை தவெக பொறுப்பாளர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். ஏனென்றால், பெரும்பாலானோர் விஜய்யின் பார்வையாளர்களாக, அவரது ரசிகர்களாக வந்திருப்பார்கள்..

எனவே, அவர்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்ற வாதத்தை தவெக பொறுப்பாளர்கள் முன்வைக்கக்கூடும். அப்படி இந்த வாதம் உண்மை என்றால், விஜய்க்கு ஓட்டு வங்கியே கிடையாது என்றுதான் அர்த்தம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+