Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோபாலா எனும் “அரசியல்வாதி”.. இவருக்கு இப்படி ஒரு முகமா? ஸ்டாலின், எடப்பாடி அறிக்கையை கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோபாலா இன்று திடீர் மரணம் அடைந்து இருப்பது பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கும் நிலையில், அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. அவர் எந்த கட்சியில் பயணித்தார்? விரிவாக பார்ப்போம்.

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா இன்று கல்லீரல் பாதிப்பு காரணமாக திடீரென காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணாமாக பாதிக்கப்பட்டு இருந்த மனோ பாலா ஜனவரி மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஓய்வில் இருந்து வந்த மனோ பாலா, ஓய்வுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார். இந்த நிலையில் திடீரென திடீரென கல்லீரல் பாதிப்பு மனோ பாலாவுக்கு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடு திரும்பிய அவருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Political face of Actor Manobala who is the member of ADMK

நடிகர், இயக்குநர் என்பதை கடந்து மனோபாலாவுக்கு அரசியல்வாதி என்ற அடையாளமும் உள்ளது. பெரியாரின் சாதி மறுப்பு கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மனோ பாலா, அவர் வழியில் செயல்பட்டாலும் பிற்காலத்தில் தீவிர கடவுள் பக்தராக மாறினார். அதன் பின்னர் அதிமுகவில் இணைந்த அவர் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக தேர்தல் சமயங்களில் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது இரங்கல் குறிப்பில் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும்,தலைமை கழக பேச்சாளருமான திரு.மனோ பாலா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல் அவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி விரிவான இரங்கல் குறிப்பையும் வெளியிட்டு உள்ளார். அதில், "தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரும். திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

நடிகர் திரு. மனோபாலா அவர்கள் 'ஆகாய கங்கை' என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கியதோடு, தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவரும், பழகுவதற்கு இனிமையானவரும் ஆவார்.

Political face of Actor Manobala who is the member of ADMK

நடிகர் திரு. மனோபாலா அவர்கள், கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு, தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றியவர். தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்.

அன்புச் சகோதரர் நடிகர் திரு. மனோபாலா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Political face of Actor Manobala who is the member of ADMK

அதிமுகவில் இருந்தாலும் அனைத்து தரப்பினரோடும் நெருங்கி பழகி நட்பு பாராட்டும் குணம் படைத்தவர் மனோபாலா. சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட புகைப்பட கண்காட்சியில் கலந்துகொண்டு பாராட்டி பேசி இருந்தார் மனோபாலா. இதனை ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. திரு. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+