அண்ணன்’ ஆடிய ஆட்டம் என்ன? ‘என் தலை’ உருள்வதுதான் என்ன? என் சோக கதை இதுவே.. புலம்பும் அமைச்சர்!
சென்னை: தமிழ்நாட்டு கோட்டையில் இப்போது பேசுபொருளாகி இருப்பது அமைச்சர் ஒருவருக்கும் ஆளும் கட்சியின் சீனியரான அண்ணன் ஒருவருக்கும் இடையேயான 'அறிவிக்கப்படாத யுத்தம்'தான்.
'கொள்கை'வாதி அமைச்சர்.. 'கொள்கை'வீச்சாளர் அண்ணன்.. திராவிட சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவர்கள்தான் இருவரும். ஆனால் உள்ளூர் அரசியல் என வருகிறபோது யார்தான் அமைதி காப்பார்கள்?

கடந்த சில நாட்களாக அதிமுக, பாஜக உள்ளிட்டவை ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருவது திருச்சி அருகே உள்ள மாவட்டத்து சம்பவம்தான். இந்த மாவட்டத்துக்காரர்கள்தான் அண்ணனும் அமைச்சரும். இருவருமே மேலிட செல்வாக்கானவர்கள்தான். ஆனாலும் அரசியலில் யாருடைய கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதுதான் நிழல் யுத்தம்.
தற்போது முடிந்த களேபரத்தில் உருண்டது 'அமைச்சரின் தலை'. ஆனால் அமைச்சர் தரப்போ ரொம்பவே குமுறிக் கொண்டிருக்கிறதாம்.. அந்த சம்பவத்துக்கும் தமக்கும் ஒரு துளியும் சம்பந்தமே இல்லை. எல்லாமே அண்ணனும் அவரது ஆட்களும்தான் களமாடி களேபரத்தை உருவாக்கியது. ஊருக்கு இளைச்சவன் கதையாக மாவட்ட அமைச்சர் என்பதால் எல்லோரும் என்னை போட்டு வறுத்தெடுக்கிறார்கள். நானும் அவருடன் மல்லுக்கட்ட முடியாது.. மேலிடத்திலும் போட்டுக் கொடுக்க முடியாது... இதை எப்படி யார் கிட்ட சொல்லி புலம்புவது என தெரியலையே என்கிற குமுறல் கோட்டை சுவர்களில் எதிரொலிக்கும் அளவுக்கு கேட்கிறதாம்.
ஆனால் அண்ணன் தரப்போ, எங்களுக்கு எந்நாளும் 'அமைச்சர்' ஒருவர்தான். எங்க அண்ணன்தான். அதற்காக 'இந்த அமைச்சர்' மீது எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதெல்லாம் இல்லை. அதே நேரத்தில் எங்க அண்ணனுக்கு எதிராக அவரையும் தலைதூக்கவும் விடமுடியாது.. அது 'இந்த அமைச்சராக' இருந்தாலும் என எகிறுகின்றனர்.
இப்போதை "மேலிட சாலை" கனத்த மவுனத்துடன் நடப்பதை கவனத்தில் வைத்து கொண்டிருக்கிறதாம். சீனியர் அண்ணன் மீது ஏற்கனவே சில பல கோபதாபங்கள் இருக்கிறதாம் மேலிடத்துக்கு.. அவரது விஸ்வரூபம் என்றைக்கும் தங்களுக்கு பேராபத்து என்பதில் மிக மிக கவனமாகவே இருப்பதுதான் மேலிடம் கடைபிடிக்கும் கொள்கை, கோட்பாடு. ஆகையால் என்றைக்கு யாருக்கு எதிராக மேலிடத்து சாட்டை சுழலும் என்பதுதான் மாவட்டத்தின் எதிர்பார்ப்பாகும்!
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?










Click it and Unblock the Notifications