"சேப்பாக்க தென்றல்", "திராவிட இளவல்" என நாளை அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்துகள்!
சென்னை: தமிழக அமைச்சராக நாளை பதவியேற்கிறார் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின். இதனையொட்டி சமூக வலைதளங்களில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர். சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார்.

பாசறை கூட்டங்கள்
தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் திராவிடர் இயக்க பாசறை கூட்டங்கள் என்ற பெயரில் கொள்கை விளக்க நிகழ்வுகளை நடத்தினார். கடந்த 19 மாத கால உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. உதயநிதிக்கு உள்ளாட்சித்துறை அல்லது இளைஞர் நலன் விளையாட்டுத்துறை இலாகா வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகை அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் என அரசியல் பிரமுகர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ள வாழ்த்து:சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்; புது சாதனைகளை, நூறாண்டுகள் வரலாறு பேசட்டும்; இளைஞர்களின் நம்பிக்கை, எதிர்கால தமிழ்நாட்டின் விடிவெள்ளி, அமைச்சராக பதவி ஏற்கும் கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு @Udhaystalin அவர்களுக்கு நெஞ்சம் நெகிழும் வாழ்த்துகள்! இவ்வாறு செந்தில் பாலாஜி கூறியுள்ளார். திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், வாழ்த்துக்கள் திரு.உதயநிதி ஸ்டாலின் என பதிவிட்டுள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ்
தமிழக சிறுபான்மை ஆணையத்தின் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ்: திராவிட இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராவது சரியான அரசியல் முடிவு. முதலமைச்சரின் பணிச்சுமைகள் வெகுவாக குறையும். திராவிட இயக்க இளஞர்களின் அரசியல பயணத்திற்கு தேவைப்படுகின்ற தலைவராக அவர் இருப்பார். வருக! வாழ்க!வெல்க! இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் திமுக நிர்வாகிகள், அரசியல் கட்சி சாராத பிரமுகர்கள் என பலரும் சமூக வலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் சல்மா
திமுகவின் கவிஞர் சல்மா தமது பதிவில் ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பை பகிர்ந்து மனமார்ந்த வாழ்த்துக்கள் .பலருக்கும் உறக்கம் வராத இரவு இன்று வாய்க்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

இளஞ்சிங்கம்
திமுக கலை இலக்கிய பகுத்தறிவு அணி செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூன்று மாதத்திற்கு ஒரு முறை அமைச்சர்களைக் கலைத்து சீட்டாட்டம் ஆடிய போது எல்லாம் மூச்சடக்கி, கைகட்டி, வாய் பொத்திக் கிடந்தவர்கள் எங்கள் இளஞ்சிங்கம் அமைச்சராகும்போது மட்டும் கதறுவது ஏன்? பதறுவோரின் வயிற்றெரிச்சல் எங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துகள் மாண்புமிகு சின்னவரே!! என பதிவிட்டுள்ளார்.

குடும்ப அரசியலா?
திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், #UdhayanidhiStalin வாழ்த்துகள்
மாண்புமிகு உதயநிதி! குடும்ப அரசியல் என்று சொல்ல மாட்டார்களா? இதுவரை சொல்லாமலா இருந்தார்கள்! என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

திமுக ஐடிவிங் மகேந்திரன்
திமுக ஐடிவிங் இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன்: மக்கள் பணியில் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து,மாண்புமிகு முதலமைச்சர் கழகத்தலைவர்
@mkstalin அவர்களின் தலைமையில் மாண்புமிகு அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் அன்புச்சகோதரர் @UdhayStalin
MLA அவர்கள் எப்போதும் போல் இதிலும் வெற்றிகளைக் குவித்து வெற்றிநாயகராகத் திகழ மனமார வாழ்த்துகிறேன்.

டாக்டர் எழிலன்
திமுக எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன்: இனிமேல் பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் தமிழ் மண்ணில் ..
பல சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி: தமிழகத்திற்கான மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
அவர்களது தொலைநோக்குப் பார்வைக்கு திண்மை கூட்டும் வகையில் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் கழக இளைஞரணிச் செயலாளர்-சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. @Udhaystalin நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இளைஞர்களிடத்தில் எழுச்சியூட்டிய களப்பணியும், அயராது ஆற்றிய மக்கள் பணியும் என்றும் தொடர வாழ்த்துகள்.

மனுதர்ம சிந்தனை
திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி: இராஜராஜ சோழன்,இராஜேந்திர சோழன் என்று அரசர்களை தங்களின் பெருமை,அடையாளம் என கொண்டாடும் இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை வாரிசு என்று வசைபாடி ஒதுக்க நினைப்பது ஒருவித நவீன மனுதர்மமே!
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட்












Click it and Unblock the Notifications