நச்னு விஜய் சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா? ஒரே நாளில் காட்டிய அதிரடி.. மொத்த கட்சியும் பார்க்குதே
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம், நடிகராக இருந்த விஜய் முழு அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கிறார். கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி பேசிய விஜய், 'தோழர்களே' எனும் வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் இடதுசாரி அரசியலை முன்னெடுக்கப்போகிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வந்த விஜய், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வந்திருந்தார். அவர் அரசியலில் இறங்கப்போவதாகவும், எனவேதான் இதுபோன்ற கதைகளில் நடிக்கிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியை தொடங்கினார். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

யாருடைய வாக்குகளை விஜய் குறிவைக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், கட்சி தொடங்கி அவர் பொதுவெளியில் எதுவும் உரையாற்றவில்லை. மட்டுமல்லாது, கட்சியின் கொள்கைகள் என்ன? அரசியல் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி? அல்லது தனித்து போட்டியா? மாநில அரசியலா? தேசிய அரசியலா? என எந்த அறிவிப்பையும் விஜய் வெளியிடவில்லை.
ஆனால், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசிய சில விஷயங்கனை வைத்து, அவர் எந்த மாதிரியான அரசியல் களத்தில் பயணிக்கப்போகிறார் என்பதை ஓரளவுக்கு புரிந்துக்கொள்ள முடிந்தது.
குறிப்பாக சமீபத்திய நிகழ்ச்சியில் நீட் குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும் பேசியிருந்தார். இது திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. மாநில உரிமைகளுக்காக நீண்ட நெடும் போராட்டங்களை திராவிட கட்சிகள் முன்னெடுத்துள்ளன. அப்படி இருக்கையில் அவர் திராவிட கட்சிகளின் பாதையில் பயணிக்கப்போகிறாரா? என்று கேள்வி எழுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பினனர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வழிநடத்தப்பட்டு வருகிறது. இவர் தலைமையில் கட்சி எதிர்கொண்ட, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே மாநில உரிமைகள் பேசுவதன் மூலம், அதிமுகவுக்கு மாற்றாக விஜய் தன்னுடைய கட்சியை முன்னுறுத்துகிறாரா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் அது அத்தனை சுலபமல்ல.
இன்றைய தலைமை பலவீனமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறலாம். அதிமுக என்பது மிகப்பெரிய கடல். அதில் கொஞ்சம் நீராவியாகி போவதால் அது தனது பலத்தை இழந்துவிடாது. ஆவியான நீர் மழையாய் மீண்டும் கடலுக்குதான் திரும்பும். அதுபோல எதிர் காலத்தில் அதிமுகவின் தலைமை பலமாகிறது எனில், கட்சி பழைய ஃபார்முக்கு வர வாய்ப்பிருக்கிறது. மட்டுமல்லாது கட்சி ஆட்சியிலிருந்து காலத்திலும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மாநில நலனுக்காக ஏராளமான விஷயங்களை செய்திருக்கிறது. எனவே இக்கட்சியின் தொண்டர்களை ஈர்ப்பது அவ்வளவு எளிதல்ல.
அதே நேரம், விஜய் இன்றைய கூட்டத்தில் தோழர்களே எனும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். கடந்த பிப்ரவரியில் அறிக்கை வெளியிட்டபோது, கட்சியினர் தங்களை தோழர்களே என்று அழைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அதையே இன்று அவர் பிரதிபலித்திருக்கிறார்.
தோழர் எனும் வார்த்தையை முதலில் பயன்படுத்தியது பெரியாராக இருந்தாலும், இன்று இது இடதுசாரிகளின் அடையாளமாக மாறிப்போயிருக்கிறது. எனவே இடதுசாரி பாணி அரசியலை விஜய் கையில் எடுக்கிறாரா? என்றும் கேள்வி எழுகிறது.
ஆனால், அப்படியான அரசியலும் சுலபமல்ல. சிம்பிளாக சொல்வதெனில், கடந்த 2022ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலகில் உள்ள மொத்த செல்வங்களில் 57 சதவிகிதம், முதல் 10% பணக்காரர்களிடம் இருக்கிறது. இதை பிடுங்கி, இல்லாதவர்களுக்கு கொடுத்தால் உலகத்தில் அனைவரும் சந்தோஷமாக வாழலாம். இதுதான் கம்யூனிச/இடதுசாரி கொள்கை. இதை விஜய் பின்பற்ற முயல்கிறார் எனில், அதற்கு முதலில் அவர் தன்னுடைய செல்வத்தை முறையாக கணக்கு காட்ட வேண்டியது வரும். மட்டுமல்லாது இடதுசாரி கொள்கை, தனிநபர் அடையாளத்தை உயர்த்தி பிடிக்காது.
எனவே இந்த பாணி அரசியலை அவரால் முன்னெடுக்க முடியாது. ஆனால் அந்த பாதையில் பயணிப்பதாக காட்டிக்கொள்ளலாம். அதற்காகதான் தோழர்கள் எனும் வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் விஜய்க்கு மற்றொரு ஆப்ஷன் இருக்கிறது. அதாவது உதிரி கட்சிகளின் தொண்டர்களை தன் பின்னால் அணி திரள வைப்பதுதான் அது. 3%க்கும் குறைவான வாக்கு வங்கிகளை கொண்ட அரசியல் கட்சியின் தொண்டர்களை தன் பின்னால் அணி திரள வைப்பதன் மூலம், தனது பலத்தை நிரூபிக்க முடியும். அதேபோல, 2K கிட்ஸ்ஸை பெருமளவு தன்பக்கம் எளிதாக ஈர்க்கவும் விஜயால் முடியும். இந்த பலம், தமிழகத்தின் சிறிய கட்சிகளை மட்டுமல்லாது, பலம்மிக்க பெரிய கட்சிகளுக்கும் பயத்தை ஏற்படுத்தும்.
இன்று நடத்திருப்பது கொடி அறிமுக விழாதான். எப்படி இருப்பினும், அவர் எந்த பக்கம் பயணிக்க போகிறார் என்பதை, இதை வைத்து தீர்மானித்துவிட முடியாது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் அறிவிக்கப்படும்போதுதான் அது தெளிவாக தெரியும்.
-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!












Click it and Unblock the Notifications