பொள்ளாச்சி கொடூரம்.. பதைபதைக்கும் வீடியோவை வெளியிட்டது இதனால்தான்.. நக்கீரன் கோபால் விளக்கம்!
பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டது ஏன் என்று மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டது ஏன் என்று மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழக மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 250 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த குற்றங்கள் தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோக்கள்தான் இந்த பிரச்னையை மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வந்தது. இந்த வீடியோக்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.

விசாரிப்போம்
பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அளித்துள்ள விளக்கத்தில், பொள்ளாச்சி விவகாரத்தை அப்படியே விட்டுவிட மாட்டோம். இதுகுறித்து நாங்கள் தனியாக விசாரித்து வருகிறோம். எங்கள் விசாரணையும் போய்க்கொண்டு இருக்கிறது. இதன் முழு பின்னணி குறித்து விரைவில் கண்டுபிடிப்போம்.

குறிக்கோள்
இந்த பிரச்சனை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடுத்து நிறுத்தி விடாதீர்கள். பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் நேரம் கிடையாது இது. பார் நாகராஜனை இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகும்.

மாட்டோம்
நமது வீட்டு பிள்ளைகளுக்கு இது போன்று நடந்தால் அமைதியாக இருப்போமா. இருக்க மாட்டோம் அல்லவா, அப்படித்தான் இதுவும். பாதிக்கப்பட்டது எல்லோரும் பெண்கள். அவர்கள் நமது பிள்ளைகள். அவர்களை நாம்தான் காக்க வேண்டும்.

என்ன விளக்கம்
வீடியோவை வெளியிடக்கூடாது என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. வீடியோவை வெளியிட்டால்தான் விவகாரம் வெளியே தெரியும். குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது என்ற காரணத்திற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது, அது தற்போது நடந்து இருக்கிறது, என்று நக்கீரன் கோபால் பேட்டியளித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications