நக்கீரன் கோபால் நாளை காலை ஆஜராக வேண்டும்.. சைபர் கிரைம் சம்மன்
சென்னை: பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது.
சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில், நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதே நேரம், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி, கோவை, உடுமலை, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகjத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவம் குறித்த வீடியோவை, வெளியிட்ட நக்கீரன் இதழ், இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரைத் தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் நக்கீரன் கோபாலுக்கு அனுப்பியுள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications