பொள்ளாச்சி வழக்கு.. சாகும் வரை ஆயுள் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் திருநாவுக்கரசு மேல்முறையீடு!
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருநாவுக்கரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது கோவை நீதிமன்றம் கடந்த மே 13ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருநாவுக்கரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தீர்ப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் மனுதாக்கல் செய்ய வேண்டிய நிலையில் தாமதம் குறித்து ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் பெண் ஒருவரின் புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இது சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வந்தது. 9 பேர் மீது 2019 மே 21ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மே 13 ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்பட்டது.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் உள்ளிட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது கோவை நீதிமன்றம் கடந்த மே 13ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2வது குற்றவாளியான திருநாவுக்கரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தீர்ப்பு வெளியாகி 60 நாட்களுக்குள் மனுதாக்கல் செய்ய வேண்டிய நிலையில் தாமதம் குறித்து ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தார்.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications