Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில்.. திருப்பு முனையாக அமைந்த ஐபிசி 376D.. சட்டம் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. IPC Section 376D இந்த வழக்கில் முக்கிய அஸ்திரமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் தான் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கி உள்ளார். அதோடு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Pollachi sexual Case Verdict How did the IPC Section 376D become a game changer

இந்த வழக்கில் பின்வரும் பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டன,

20 B கூட்டுசதி

366 - பெண்ணை கடத்தி செல்வது

370 - கடத்தி செல்ல தூண்டுவது

376 d - கூட்டு பாலாத்காரம்

509 பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது

354 a பாலியல் துன்புறுத்தல்

354 b பெண் மீது வன்முறை கையாளுதல்

66,67 தகவல் தொழில் நுட்ப சட்டம்

உள்ளிட்ட 13 க்கும் மேலான பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

IPC Section 376D

இந்த வழக்கில் IPC Section 376D பிரிவு முக்கிய பங்கு வகித்தது. இந்திய அடிப்படை குற்றச்சட்டம் (IPC) பிரிவு 376D என்பது "கூட்டாக பாலியல் பலாத்காரம்" தொடர்பான சட்டப்பிரிவு ஆகும். ஒரு பெண் ஒன்றுக்கும் மேல் உள்ள ஆண்கள் மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பட்சத்தில் அது சட்டப்படி கூட்ட பாலியல் பலாத்காரம் என வரையறுக்கப்படுகிறது.

இதற்கான தண்டனை: குறைந்தபட்சம் 20 வருடங்கள் கடுமையான சிறை (rigorous imprisonment)
- சமயங்களில் ஆயுள் சிறையாக கூட வழங்கப்படலாம் (life imprisonment) மேலும், அபராதமும் (fine) விதிக்கப்படும்.

அபராதமாக வசூலிக்கப்படும் தொகை: பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. பெண்ணுக்கு தேவையான மருத்துவ சேவைகள் மற்றும் புனரமைப்புக்காக செலவழிக்க வேண்டிய தொகை அபராதமாக விதிக்கப்படும். இன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இந்த சட்ட பிரிவு முக்கிய பங்கு வகித்தது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் 2 இழப்பீடு வழங்க நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10-15 லட்சம் வரை 3 இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

குற்றவாளிகளுக்கு விதித்த அபராதத்தையும் வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கே பிரித்து தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் 5 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ வழக்கறிஞர் தகவல் வெளியிட்டு உள்ளார். "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சிகளில் ஒன்று கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் பயமின்றி, சுதந்திரமாக சாட்சியளித்துள்ளார்கள். 9 பேர் மீதான 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+