ஓபிஎஸ் உடன் பேச்சா? டீ குடிப்பது போல கூட்டணி பேச முடியாது.. பொன்னார் பதிலால் அதிர்ந்த ஓபிஎஸ் டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர்கள் தன்னுடன் பேசி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில் ஓபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம், கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Pon Radhakrishnans answer shocked O Panneerselvam team

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் பாஜக வெற்றிகரமாக அடியெடுத்து வைக்க வேண்டும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இருக்கக்கூடிய இந்த 7 மாத காலத்தில் செய்யவேண்டிய பணிகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் இன்றைய கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு, பாஜகவினர் முழுமூச்சோடு, ஈடுபாட்டோடு களம் இறங்கி பணிபுரிய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அதிமுக உடனான கூட்டணி குறித்து இந்தக் கூட்டத்தில் ஏதாவது விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், "அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே இருக்கிறது. அந்தக் கூட்டணியின் அடிப்படையில், என்னென்ன விஷயங்களை பாஜக கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் இந்தக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

நத்தம் விஸ்வநாதன் பேச்சு பற்றி: பாஜகவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் வருகிறது. அதற்கு முன்பாக 5 மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 5 மாநிலத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் பாஜக இருந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு குறைந்தபட்சம் இன்னும் 5 மாதங்கள் உள்ளது. எங்களை வலிமைப்படுத்தக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். அது நிச்சயமாக இந்த இரண்டு மாதங்களுக்கும் முடியும்" எனத் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பொன்னார், "அதிமுகவில் 2 கோடி பேர் உள்ளதாக கூறுகிறார்கள்; 2 கோடி கருத்துகள் வர முடியும். எங்கள் கட்சியில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களிடம் இருந்தும் லட்சக்கணக்கான கருத்துகள் வரும். இந்த ஒவ்வொரு கருத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது." என்றார்.

ஓபிஎஸ் தரப்புக்கு ஷாக்: பாஜக தலைமையுடன் பேசி வருவதாக ஓபிஎஸ் சொல்கிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், "பல பேர் பலவித கருத்துகளை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இதை பற்றி எல்லா விஷயங்களையும் ஊடகங்கள் முன் பேசுவது எந்த விதத்தில் சரி? கூட்டணி என்பது டீ குடிப்பது போல் பேசிவிட்டு போவது கிடையாது. ஏற்கெனவே சில கட்சிகள் நம் கூட்டணியில் உள்ளனர். அனைவரிடமும் பேசி முடிவெடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதனையடுத்து அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. ஓபிஎஸ், அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முடிவு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பாஜக தலைவர்கள் தன்னுடன் ஒரு மாதமாக பேசி வருவதாகத் தெரிவித்தார்.

நேற்று ஓபிஎஸ் அணியினர் திடீர் ஆலோசனை நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பதில் ஓபிஎஸ் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+