ஜனநாயகனை வீழ்த்திய பராசக்தி டிரைலர்! கொண்டாடி தீர்க்கும் SK ரசிகர்கள்.. எவ்வளவு வியூஸ் தெரியுமா
சென்னை: வரும் பொங்கலுக்குத் தமிழில் ஜனநாயகன் மற்றும் பராசக்தி என இரு படங்களும் வெளியாக உள்ளன. சில வாரங்களே ரிலீஸுக்கு இருப்பதால் புரோமோஷன் பணிகளில் இரு படக்குழுவும் தீவிரமாக இறங்கியுள்ளது. இரு படத்தின் டிரைலரும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்போது ஜனநாயகன் டிரைலரை விட அதிக வியூஸ்களை பராசக்தி பெற்றுள்ளது.
பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரு முக்கிய படங்கள் ரிலீசாகிறது. விஜய் நடிப்பில் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளது. இருவருமே தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களாக இருப்பதால் இரு படங்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

பொங்கலுக்கு இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படங்களுக்கான புரோமஷன் பணிகளில் இரு படக்குழுவினரும் இறங்கியுள்ளனர். அதன்படி கடந்த 3ம் தேதி ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளியானது. அதேபோல பராசக்தியின் டிரைலர் 4ம் தேதி வெளியானது. இரு படத்தின் டிரைலர்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு பக்கம் விஜய்யின் ஜனநாயகன் டிரைலர் பக்கா கமர்ஷியலாக ரெடியாக உள்ளது. டிரைலரில் ஏகப்பட்ட அரசியல் வசனங்கள், விஜய்க்கான மாஸ் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. மேலும், டிரைலரை வைத்துப் பார்க்கும்போது அது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி ரீமேக் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மறுபுறம் பராசக்தி திரைப்படம் உணர்ச்சிப்பூர்வமாகவும் இந்தி போராட்டத்தை அடிப்படையாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இப்போது ஜனநாயகன் டிரைலரை விட பராசக்தி திரைப்படத்தின் டிரைலர் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது. பராசக்தி திரைப்படம் வெளியான 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதேநேரம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' ட்ரெய்லர் 2 நாட்களில் 3.8 கோடி பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராகவும் அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களை அடிப்படையாகவும்கொண்டு உருவாகியுள்ளது பராசக்தி திரைப்படம்!
விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன்.. விஜய்யோடு இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துவிட்டார். 2026 சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார். அரசியலுக்கு வந்துவிட்டதால் அவர் நடிப்பிற்கு முழுமையாக முழுக்க போட இருக்கிறார். அவரது கடைசி படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications