பொங்கல் 2026.. பெங்களூரில் இருந்து கோவை போத்தனூர் வழியாக கொல்லம், கண்ணூருக்கு சிறப்பு ரயில்
கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை போத்தனூர் வழியாக கொல்லம், கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வருகிற 13-ந் தேதி இரவு 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரயில் மறுநாள் மாலை 4 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
கோவை வழியாக கேரளாவிற்கு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, மற்றும் பெங்களூருவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் கோவை வழியாக கேரளாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 13-ந் தேதி இரவு 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06219) மறுநாள் மாலை 4 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம்-பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06220) மறுநாள் காலை 10.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும்.இந்த ரயிலானது காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதுபோன்று பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி 13-ந் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரயில் (எண்:06577) மறுநாள் காலை 7.50 மணிக்கு கண்ணூர் நிலையத்தை சென்றடையும்.
மறு மார்க்கமாக 14-ந் தேதி காலை 11.30 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் கண்ணூர்- பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06578) மறுநாள் காலை 4.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயிலானது தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரிசூர், சொரணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications