பொங்கல் தொகுப்பில் தமிழக பயனாளிகளுக்கு பணம்.. உருண்டை வெல்லம், கரும்பு கொள்முதல்! அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புகளை வழங்க உள்ளது. இந்நிலையில், சேலம், திருச்சி உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.. பண்டிகை நெருங்கும் நேரத்தில் விவசாயிகளின் இந்த வேண்டுகோளானது, மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கியிருக்கும். இதற்கான அறிவிப்பு வெளியாகியதுமே, பரிசு தொகுப்பை வழங்க தேவையான ஏற்பாடுகளை கூட்டுறவு சங்கத்துறை செய்து வருகிறது.

Pongal Bonus Cash Jaggery Sugarcane

ரேஷன்கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியையும் துவங்கி உள்ளனர். அனைத்து ரேஷன்கடைக்கும் சர்க்கரை, பச்சரிசி அனுப்பப்பட்டு வருகிறது.

பொங்கல் தொகுப்பு வெல்லம்

இதையடுத்து, பொங்கல் தொகுப்பில் வெல்லம் சேர்க்க வேண்டும் மற்றும் கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சங்கச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் விடுத்திருந்த கோரிக்கையில், "குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் அச்சு வெல்லம் அல்லது உருண்டை வெல்லம் சேர்க்கப்பட வேண்டும், ரொக்கம் வழங்கினால் அது நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்..

செங்கரும்பு - உருண்டை வெல்லம்

இந்நிலையில், திருச்சி மாவட்டத்திலுள்ள கரும்பு விவசாயிகளும் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பிலியபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவுகளில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்ய தயாராக உள்ளன.

கடந்த ஆண்டுகளில் டிசம்பர் 15-ந் தேதிக்குள் கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாகமேலாக விவசாயிகளின் பெயர் பட்டியலை அரசு பெற்றிருந்தும், இதுவரை எந்த கொள்முதல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.. வருகிற 8ந் தேதி முதல் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் தொகுப்பு அரசு வழங்க உள்ளது.

கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ள நிலையில், கரும்பு விவசாயிகள் அரசு செங்கரும்பை கொள்முதல் செய்யுமா? செய்யாதா? என்ற குழப்பத்திலும், கவலையிலும் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்...

தமிழக பயனாளிகள் - பொங்கல் தொகுப்பு

ஒருவேளை கரும்பு கொள்முதல் தாமதமானால், ஏக்கருக்கு ரூ.ஒன்றரை லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் கலங்கி போயிருக்கிறார்கள்.. எனவே தமிழக அரசு உடனடியாக கரும்பை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்து குடும்பங்களுக்கு இரண்டு கரும்புகள் வழங்கப்பட வேண்டும், கொள்முதல் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட வேண்டும் மற்றும் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக அன்புமணி கோரிக்கை விடுத்தவாறு உள்ளார்..

அதேபோல பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கிலோ வெல்லம் சேர்க்க வேண்டும் என்றும் கரும்பை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும் என்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.. இப்போது விவசாயிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்திருப்பது கவனம் ஈர்க்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+