பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு.. சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது!
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்று தீர்ந்திருக்கிறது. ஜன.15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜன.14ம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன. சென்னை - கோவை, சென்னை-டெல்டா மாவட்டங்கள், சென்னை-மதுரை, சென்னை-கன்னியாகுமரி வழித்தடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன.
பண்டிகை நாட்டிகளில் ரயில் டிக்கெட்டுக்கள் சீக்கிரமாக விற்று தீர்வது வழக்கமானதுதான். அந்த வகையில் தீபாவளிக்கும் டிகெட்டுக்கள் முழுமையாக விற்று தீர்ந்தன. இந்நிலையில் ஜன.14ம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்திருக்கிறது. சென்னை எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும்,
- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633)
- அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635)
- குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127)
- தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் (22657)
என அனைத்து ரயில்களும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. அதேபோல தென்மாவட்டங்களுக்கு செல்லும் மற்ற ரயில்களை பொறுத்தவரை,
- திருநெல்வேலி வந்தேபாரத் (20665)
- நெல்லை சூப்பர் பாஸ்ட் (12631)
- எழும்பூர்-திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் (20605)
ரயில்களிலும் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்திருக்கின்றன. சென்னை எழும்பூர் தொடங்கி மதுரை வரை செல்லும் மற்ற ரயில்களை பொறுத்தவரை
- தேஜஸ் எக்ஸ்பிரஸ் (22671)
- குயின்லேண்ட் எக்ஸ்பிரஸ் (16101)
- பொதிகை எக்ஸ்பிரஸ் (12661)
- முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12693)
- வைகை எக்ஸ்பிரஸ் (12635)
- பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637)
இது தவிர வெளி மாநிலங்களிலிருந்து வந்து எழும்பூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் ரயில்களிலும் டிக்கெட்டுகள் காலியாகிவிட்டன.













Click it and Unblock the Notifications