பொங்கல் பரிசு 2026.. ரொக்கப் பணம் இந்த முறை யாருக்கு எல்லாம் கிடைக்க வாய்ப்பு இல்லை தெரியுமா?
சென்னை: தமிழகம் முழுவதும் 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கையை உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஆண்டு ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை என்கிற போதிலும்,இந்த ஆண்டு பொங்கல் ரொக்கம் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் இந்த முறை யாருக்கு எல்லாம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விரும்பும் அரசு, அதற்காக ஆண்டு தோறும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குகிறது. கடந்த ஆண்டு மட்டுமே பொங்கலுக்கு ரொக்கம் வழங்கப்படவில்லை.. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ரொக்கம் வழங்குவது தொடர்ந்து நடந்து வந்தது.

பொங்கல் பரிசில் என்னென்ன கிடைக்கும்
கடந்த 2022-ம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்பட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கரும்பும் வழங்கப்பட்டது. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2025ம் ஆண்டில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் சேர்த்து, இந்த முறை கூடுதலாக ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பொங்கல் பரிசு ரொக்கம் எவ்வளவு
பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.4 ஆயிரம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வெளியிட உள்ளார். தமிழகத்தில் உள்ள 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 244 மொத்த ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
பொங்கல் பரிசு யாருக்கு கிடைக்கும்:
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு தகுதி உள்ளவர்களாக ஒரு கோடியே 17 லட்சத்து 10 ஆயிரத்து 567 முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் ஒரு கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 452 முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைதாரர்கள் என மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரேஷன் அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 கிலோ பச்சரிசியும், அதே அளவில் சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 33 சதவீதம் அளவிலான பச்சரிசி மற்றும் சர்க்கரையானது கடந்த 27-ந் தேதி நிலவரப்படி ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டிருக்கிறது.
வருமான வரி செலுத்துவோர்
இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்பு எவ்வித புகாருமின்றி மக்களுக்கு செல்ல அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க உள்ளது. அதேநேரம் பொங்கல் பரிசு ரொக்கம் யாருக்கு எல்லாம் கிடைக்கும்.. யாருக்கு எல்லாம் கிடைக்காமல் போகும் என்பது உறுதியான தகவல்கள் இல்லை. கடந்த 2024ம் ஆண்டு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்களுக்கு இல்லை என்று கூறப்பட்டது.
பொங்கல் பரிசு யாருக்கு கிடைக்காது
அதாவது தமிழ்நாட்டில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் (PHH, PHH-AAY, NPHH) மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்குக் கிடைத்து வருகிறது, ஆனால், பொருட்களை வாங்காமல் அடையாளத்திற்காக மட்டும் ரேஷன் கார்டை வைத்திருப்பவர்கள் (NPHH-NC), மத்திய/மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் போன்ற சில பிரிவினருக்குப் பொங்கல் பரிசு கிடைப்பது இல்லை.. சர்க்கரை கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு முந்தைய காலங்களில் கிடைத்தது இல்லை... எனினும் இந்த முறை தேர்தல் என்பதால் அதுபோல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா அல்லது அனைவருக்கும் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications