டபுள் ஜாக்பாட்! தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகை ரூ 2000! அறிவிப்பு எப்போது? முதல்வர் பிளான் என்ன?
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ 1000 ரொக்கம் வழங்குவதற்கான அறிவிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழர் திருநாளாம் அறுவடை திருநாள் தை முதல் நாள் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பரிசுடன் ரூ 1000 ரொக்கம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு பொங்கல் வருவதற்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. புதுச்சேரி அரசு கூட அந்த மாநில மக்களுக்கு ரூ 1000 அறிவித்துவிட்டது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இதையொட்டி பொதுமக்களுக்கு ரூ 1000 ரொக்கம் வழங்கப்பட்டது. அது போல் எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட மக்களுக்கு தலா ரூ 7500 ம், மீன்பிடி படகுகளை சரி செய்ய ரூ 12000ம் வழங்கப்பட்டது. அது போல் நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக ரூ 6000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை கொடுப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு ஒவ்வொரு ரேஷன் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. அது போல் புயல் வெள்ள நிவாரணமும் இப்படியே கொடுக்கப்பட்டது. அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 முன் கூட்டியே வழங்கப்பட்டது.
அது போல் மாதாமாதம் வழக்கமாக 15 ஆம் தேதி வழங்கப்படும் உரிமைத் தொகை பொங்கலை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டால் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications