சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது ரொம்ப முக்கியம்! ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயா? தமிழ்நாடு அரசு போட்ட மேஜர் உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில் ரேஷன் கடைகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது.

பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலின் நேற்று பொங்கல் பரிசு தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், நிதி துறை அமைச்சர் பிடிஆர், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அரசு உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த முறை தவறு நடக்க கூடாது. தரமான பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. முக்கியமாக பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை விற்க கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயா? தமிழக அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்! பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயா? தமிழக அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. எல்லா வருடமும் பொங்கல் சமயத்தில் அரசு சார்பாக சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கரும்பு உட்பட மொத்தம் 21 பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரிசு விவரம்

பரிசு விவரம்

சில இடங்களில் மஞ்சள் பை தட்டுப்பாடு காரணமாக இந்த பொருட்கள் வாங்க வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏலக்காய், பாசிப்பருப்பு, மிளகு, புளி, நெய், வெல்லம், முந்திரி, திராட்சை, கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, பச்சரிசி, முழு கரும்பு, ரவை, கோதுமை மாவு, உளுத்தம் பருப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக கரும்பு உட்பட மொத்தம் 21 பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.இல்லையென்றால் மக்களுக்கு பொருட்கள் வழங்காமல், 1000 ரூபாய் பணமாக அட்டைக்கு கொடுத்துவிடலாம். மக்களே பொருட்களை வாங்கிக்கொள்வார்கள் என்ற ஆலோசனையில் அரசு இருப்பதாக கூறப்படுகிறது.

ரேஷன்

ரேஷன்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு என்று புதிய விதி ஒன்றை அமல்படுத்தி உள்ளனர். அதன்படி கடந்த பொங்கல் தொகுப்பில் சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருந்ததாக புகார்கள் வைக்கப்பட்டது. அதேபோல் சில இடங்களில் வெல்லம் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. புளியில் பல்லி, ஊசி போன்ற பொருட்கள் இருந்ததாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசை விமர்சிக்க வேண்டும் என்று சில தவறான வதந்திகள் பரப்பபட்டதாகவும் கூறப்படுகிறது.

 அமைச்சர்கள் கூட்டம்

அமைச்சர்கள் கூட்டம்

இந்த வருடம் அது போல நடக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார். இந்த கூட்டத்தின் முடிவில் இனி ரேஷன் பொருட்களை இரவு நேரத்தில் அனுப்ப கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளுக்கு இரவு நேரத்தில் பொருட்களை கொண்டு சேர்க்க கூடாது. பகல் நேரத்தில்தான் பொருட்கள் செல்ல வேண்டும். இதை ரேஷன் கடை அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ரேஷன் கடைகள்

ரேஷன் கடைகள்

இரவு நேரத்தில் பொருட்களை ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பொருட்களை கொண்டு செல்வதில் இருந்து இந்த விதி தொடங்க உள்ளது. அதாவது பொங்கல் பொருட்களையும் இரவு நேரத்தில் கொண்டு செல்ல கூடாது. ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொங்கல் பொருட்களை ஊழியர்கள் முறையாக பரிசோதித்துதான் வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த முறை போல இந்த முறை முறைகேடு நடக்க கூடாது என்பதற்காக இந்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

English summary
Pongal Gift: Major announcement to the ration shops amid 1000rs Pongal price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X