மக்களே ரெடி? பொங்கல் கிப்ட் + பணம்.. தமிழக ரேஷனில் "இதுவும்" வந்திறங்கிருச்சு.. குஷியில் விவசாயிகள்
சென்னை: ரேஷன்தாரர்களுக்கு பரிசுத்தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை, கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளதுடன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அவைகளை கொண்டுசெல்லும் பணிகள் துரிதமாகி உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் கரும்பு பயிரிடும் விவசாயிகள் அதிக விலைக்கு விற்க முடியுமா? கரும்பு முழுவதும் விற்குமா என்ற நிலையில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு: கடந்த சில வருடங்களாகவே, தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பை சேர்த்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.. ஆனாலும் கொரோனா பாதிப்பு காலங்களில், பன்னீர்கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கடுமையாகவே பாதிக்கப்பட்டனர். முக்கியமாக, 6 அடி உயரமுள்ள கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட்டதால் விவசாயிகளுக்கு மறுபடியும் சிக்கல் ஏற்பட்டது..

கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறுமா என்ற நிலைமை ஏற்பட்டது. இதற்காக விவசாயிகள் போராட்டங்களை நடத்தியதையடுத்து, அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இந்த வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து, அரசே கொள்முதலும் செய்து, பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் விடுத்தபடியே வந்தனர்.
பொங்கல் : அதன்படியே, பொங்கல் பரிசுத்தொகுப்பினை தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.. இதில் முழுக்கரும்பும் இடம்பெற்றுள்ளது.. எனவே, கரும்பு உற்பத்தியும் ஜரூரராக நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காகவே, சின்னமனூர் பகுதியில் கரும்புகள் மும்முரமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
எப்போதுமே, பெரியகுளத்தில் 43.95ஏக்கர் அளவிலும், தேனியில் 5.90ஏக்கரிலும், சின்னமனூரில் 56.17ஏக்கர் என்று மாவட்டத்தில் மொத்தம் 106ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகள் விளைவிக்கப்படும். இங்கிருந்துதான், நெல்லை, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, சங்கரன்கோயில் மற்றும் கேரளா மாநிலத்துக்கும் அதிகளவில் அனுப்பப்படும்..
அறுவடை பணிகள்: ஆனால், இந்த முறை, கரும்புகளின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் சின்னமனூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
கூட்டுறவு சங்கங்களும் இவற்றை கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளன. தோட்டங்களில் வெட்டப்படும் கரும்புகள், உடனுக்குடன் லாரிகளில் ஏற்றப்படுகின்றன.. பின்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அவைகள் கொண்டு செல்லப்பட்டும் வருகின்றன. இதனால், சின்னமனூர் புறவழிச்சாலையில் அறுவடை செய்த கரும்புகளை ஏற்றிக்கொண்டு லாரிகளும் பறந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications