பொங்கல் தொகுப்பு பரிசு ரூ.3000 பயனாளிகளுக்கு! பரிசுத்தொகை வாங்கிட்டு இப்படி பண்ணுங்க.. சீமான் பளிச்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. அதேசமயம், எவ்வளவுதான் பரிசு தொகுப்பு தந்தாலும்கூட, அவையெல்லாம் வாக்குகளாக மாறாது என்றும் விமர்சித்து வருகின்றன.. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகை உயர்ந்து கொண்டே போவதன் மூலம் நமது வாக்கு மதிப்பும் கூடிக் கொண்டே செல்வதாக சீமானும் கருத்து தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டு திமுக அரசு வெறும் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கியது. ரொக்கப் பணம் ஏதும் வழங்கவில்லை. ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து திமுக அரசு வழங்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு என்ன பரிசு கொடுப்போம் என்பது ரகசியம். அதை இப்போது சொல்ல முடியாது. அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
எப்படியும் தேர்தலுக்கு முன்பாக பொங்கல் பரிசு ஒரு 'லட்டு' போல் வந்து மாட்டி இருப்பதால், ரொக்கப் பணத்தை அதிகப்படுத்தி பெண்களின் மனம் குளிரச் செய்யும் வகையில் திமுக அரசு முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ரூ.3000 , ரூ.5000 ரொக்கப் பணம்
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "பொங்கல் பரிசுடன் ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும்" என திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படி ரொக்கப் பணத்தை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை மட்டும் வழங்குவதால் வாக்குகள் உயராது என்றும் சில அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்...
2 நாட்களுக்கு முன்பு, "திமுக அரசு பொங்கலுக்கு ரூ.3,000 கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். இப்போது இதே கருத்தை நாம் தமிழர் கட்சி சீமானும் பேசியிருக்கிறார்..
சீமான் - திமுக அரசு
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, "எஸ்ஐஆர் பணியை தொடர்ந்து எதிர்த்தோம். மொத்த வாக்காளர்களையும் பாதிக்க செய்வது போல் இருந்தது இப்பணி. இந்த பணியை முறையாக செய்ய ஆறு மாதங்கள் அவகாசம் தந்திருக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை ஓட்டுரிமை மட்டுமே. அந்த ஓட்டை காப்பாற்ற போராட வேண்டி இருப்பதால் இது ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வாக்காளர்கள் தான் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர். ஆனால் இன்றைக்கு ஆட்சியாளர்கள் தான் வாக்காளர்களை முடிவு செய்கின்றனர். பணம் கொடுத்தால் தான் ஓட்டு போடவே வருகிறார்கள்.
தேர்தல் வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகை ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோரி வருகிறார்.. ஆனால் அவரது ஆட்சியில் ரூ.2,500 தான் கொடுத்தார். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்..
விவசாயிக்கு ஓட்டு போடுங்க
இப்போது பொங்கல் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் கொடுக்க உள்ளதாக தெரிகிறது. அதை வைத்து பார்த்தால் ஓட்டுக்களின் மதிப்பு தான் கூடிக்கொண்டு போகிறது.. இப்படி ரூ.3,000, ரூ.5,000 என பொங்கல் பரிசுத் தொகை உயர்ந்து கொண்டே போவதன் மூலம் நமது வாக்கு மதிப்பும் கூடிக் கொண்டே செல்கிறது என்பது தான் அர்த்தம். அப்படியானால், பொங்கல் பரிசுத்தொகை வாங்கி கொண்டு விவசாயிக்கு வாக்கை அளியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் சீமான்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications