Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த சரவெடி.. டோக்கன் ரெடி? பொங்கல் பரிசு பொருள் வழங்க கூடுதல் ஊழியர்கள்: கூட்டுறவு துறை பதிவாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ''பொங்கல் பரிசு பொருள் வழங்கும் ரேஷன் கடைகளில் தேவையெனில் போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற வேண்டும்'' என கூட்டுறவு துறை பதிவாளர் சுப்பையன் அறிவுறுத்தியுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.. பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசு தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

pongal gift package token distribution registrar of cooperative societies

டோக்கன்கள்: அதன்படி ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்கவும், இரண்டாம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும் பிற்பகலில் 200 பேருக்கும் டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தல்களை தமிழக அரசு கொடுத்துள்ளது.

இந்நிலையில், கூட்டுறவு இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை பதிவாளர் சுப்பையன் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.. அந்த சுற்றறிக்கையில், "பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வரும் 9ம் தேதி முதல், முறையாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்க வேண்டும்.

போலீஸ் பாதுகாப்பு: பொருள் பெறும் நாள், விவரம் இருக்க வேண்டும். முதல் நாள் காலை மற்றும் பிற்பகல் தலா 100 பேர்; 2வது நாள் முதல் காலை 150, பிற்பகல் 200 பேர் என பொருள் வழங்குவதோடு, அதன் விவரம் கடை முன் வைக்கப்பட வேண்டும். மேலும் 1500 கார்டுக்கு மேல் உள்ள கடைகளுக்கு கூடுதல் ஊழியர் பெற்றுக் கொள்ளவேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடிய இடங்கள், கூட்ட நெரிசல் ஏற்படும் கடைகளுக்கு உரிய வகையில் போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற வேண்டும்.

அனைத்து கடைகளிலும் போதிய அளவு பொங்கல் பரிசுப் பொருட்கள் இருப்பில் இருப்பதையும், தரமானதாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். டோக்கன் வினியோகம் குறித்த தகவல் தினமும் மாலை 5:00 மணிக்குள் அளிக்கப்பட வேண்டும். எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் இப்பணிகள் செய்து முடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கோரிக்கை: இதனிடையே ரேஷன் ஊழியர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்திருக்கிறார்கள்.. அதன்படி, ''தமிழகத்தில் கடந்த காலங்களில் பொங்கல் பரிசு வழங்கும்போது பல்வேறு பிரச்சனைகள், நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.. எனவே, இந்த முறை அவைகளை தவிர்க்கும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை மாதம் முழுவதும், அனைத்து வேலை நாட்களிலும் வழங்கலாம் என்று அறிவிப்பு வைக்க அனுமதிக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+