பொங்கல் பரிசு ரூ.3 ஆயிரம்.. போன பொங்கலுக்கு கோழி முட்டைதானே கொடுத்தாங்க.. கலாய்த்த கஸ்தூரி
சென்னை: தமிழக அரசு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், போன பொங்கலுக்கு கோழி முட்டை தான் கொடுத்ததாக நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார். ஓய்வூதியமும் ஏமாற்று வேலை என திமுக அரசை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 3,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பொங்கல் பரிசு ரூ.3000
நாளை முதல் டோக்கன் வழங்கப்பட்டு ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்புடம் ரொக்கமாக ரூ.3,000 வழங்கப்பட இருக்கிறது. வரும் 8 ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.
நடிகை கஸ்தூரி விமர்சனம்
இந்த நிலையில் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவதை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார். போன பொங்கலுக்கு உதயநிதி ஸ்டாலின் காட்டுவாரே அதே கோழி முட்டை தான் கொடுக்கப்பட்டது என்றும் ஓய்வூதியம் என்ற பெயரில் ஏமாற்றத்தை தான் திமுக அரசு கொடுத்துள்ளதாகவும் விமர்சனம் செய்துள்ளார். நடிகை கஸ்தூரி கூறியதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் வாக்குறுதி கொடுத்து இருந்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. இப்போ என்ன பண்ணுகிறார்கள் என்றால், ஊழியர்களிடம் இருந்தே 10 சதவீதத்தை வாங்கிக் கொண்டு அதை வரி மூலமாக கொடுக்கிறோம் என்று சொல்லி பென்சன் என்ற பெயரில் கொடுப்பது என்பது ஏமாற்றுத்தனம். பயங்கரமான ஏமாற்று வேலை. ஓய்வூதியம் கிடையாது அது..
போன பொங்கலுக்கு கோழி முட்டை தான்
எங்க கிட்டயே காசு வாங்கிக்கொண்டு பிறகு எங்களுக்கே கொடுப்பது ஓய்வூதியம் கிடையாது. இதை மறைப்பதற்காக நேற்று மிகப்பெரிய விழா எடுத்து தமிழகத்தில் அனைத்து ஊழியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய காவல் தெய்வமே என பயங்கரமாக கொண்டாடி இருக்காங்க.. கொடுக்கிறேன்.. கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுவது தவறு. இது பெரிய பிரச்சினையாகும்.
இன்னும் 3 மாஷம் தானே இருக்கு. இதற்கு பிறகு எப்படியும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என தெரிந்துகொண்டு இஷ்டத்திற்கு ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னாடி பொங்கல் என்பதால் இப்போது ரூ.3000 கொடுக்கிறார்கள். அதுக்கு முன்னாடி வருஷம், அதாவது போன வருஷம் எவ்வளவு கொடுத்தாங்க.. ஜீரோ.. உதயநிதி ஸ்டாலின் காட்டுவாரே அதே கோழி முட்டை தான். அந்த முட்டையை தான் அவங்க எல்லாருக்கும் பிரிச்சி கொடுத்தாங்க..
ஊருக்கே விபூதி அடித்தவர்கள்
இன்றைக்கு 3 ஆயிரம் ஏன் கொடுக்கிறார்கள் என்றால் அடுத்த மாதம் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்துவிடும். இதற்காக தான் இப்போது இந்த பணத்தை கொடுக்கிறார்கள். அம்மா இருந்துட்டு போனதுக்கு அப்புறம் தான் இவங்க 5 வருஷம் இருந்திருக்காங்க.. சொன்னதை தான் செய்வோம்.. செய்வதை தான் சொல்வோம் என சொல்லி ஊருக்கே விபூதி அடித்தவர்களை மக்கள் நியாபகம் வைத்துக் கொண்டு தான் இருக்காங்க.
அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமாட்டார்கள். பீகார் தேர்தலில் யாருக்கு அவர்கள் பணம் கொடுத்தார்கள் என்று நீங்க புரிந்துகொள்ளவில்லை. அது பொங்கல் இலவசம் கிடையாது. எம்.எஸ் எம்.இக்கு தகுதியான பெண்களுக்கு கொடுக்க கூடிய ஊக்கத்தொகை. எல்லாருக்கும் கொடுக்க கூடிய மறைமுக லஞ்சம் கிடையாது. இவ்வாறு கஸ்தூரி பேசினார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications