கண்டிப்பா வீட்ல இருங்க..வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்! 2 நாள் தான்..ரொக்கப்பரிசு கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் அச்சிடப்பட்டு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த டோக்கன்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் நேரடியாக ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப் பரிவு வழங்கப்படுவது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 2 கோடியே 27 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 19 பேர் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் வழக்கம்போல பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் ரொக்கத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். இந்த பரிசுத் திட்டத்திற்காக அரசு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

tn govt Pongal Gift Tamil Nadu

பொங்கல் பரிசுத் தொகுப்பு

ரேஷன் கடைகளில் இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை மற்றும் அரிசி ஏற்கனவே வந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் சேர்க்கப்படும் பொருட்களும் இரண்டு நாட்களுக்குள் கிடைக்கப்போகின்றன. அதேசமயம், இலவச வேட்டி மற்றும் சேலைகளும் ரேஷன் கடைகளுக்கு வந்து சேர்த்துவிட்டன. இந்த முறை வழங்கப்படும் டோக்கன்களில், ரேஷன் கடையின் பெயர் மற்றும் எண், டோக்கன் எண், ரேஷன் அட்டைதாரரின் பெயர், அட்டை எண், முகவரி, மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வர வேண்டிய தேதி மற்றும் நேரம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளன.

ரேஷன் அட்டைதாரர்கள்

இதனால் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்த்து ஒழுங்காக விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பரிசுத் தொகுப்பை பெற வேண்டும். அப்போது அந்த டோக்கன் மீண்டும் கடை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்படும். ஏதேனும் காரணம் காரணமாக டோக்கன் இல்லாமல் வந்தால், அந்த விவரங்கள் அங்கு நேரடியாக பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

பொங்கல் பரிசு டோக்கன்

இதன் மூலம் தகுதியான அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பரிசுத் தொகுப்பைப் பெறுவது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பொங்கல் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான திருநாள். அதனை முன்னிட்டு அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்கும் இந்த பரிசுத் திட்டம், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு உதவியாக இருப்பதால் மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற ஆர்வமாக உள்ளனர்.

பொங்கல் பரிசு ரொக்கத் தொகை

இந்த டோக்கன்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் நிலையில், தமிழக அரசு அரிசி கரும்பு சர்க்கரை ஆகியவற்றுடன் ரொக்க பரிசு அறிவிப்பையும் வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ரொக்க பரிசுத்தொகை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+