Pongal Kolam 2025: "பொங்கல் கோலங்கள்" போடுவது எப்படி? படங்களுடன் விளக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது பொங்கல், சூரியன் வழிபாடு, கரும்பு.. இவை எல்லாவற்றையும் விட கோலங்கள்தான்.
போகி பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை பலர் தங்கள் வீடுகளில் அழகான கோலங்களை போட்டு மகிழ்வர். கோலங்கள் போடுவது என்பது லட்சுமி கடாட்சம் என்பதால்தான் அந்த காலம் தொட்டே இந்த கோலம் போடும் நடைமுறை தற்போதும் பின்பற்றப்படுகிறது.

என்னதான் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிக் கொண்டாலும், சிறிய ஸ்டார் கோலத்தையாவது அரிசி மாவிலோ கோல மாவிலோ போட்டால் அது அழகுதான். கோலம் போடுவது அவரவருக்கு ஒரு வாகு இருக்கும். சிலர் பட்டை பட்டையாக போடுவார்கள், சிலர் மெல்லிய கம்பியை போல் போடுகிறார்கள்.
யாருக்கு எது வருமோ அதை வைத்து வண்ணங்களை தீட்டி வீட்டையே அழகுபடுத்துகிறார்கள். அதுவும் பொங்கலுக்கு சில வீடுகளில் போடும் கோலங்களை பார்க்கவே மக்கள் கூடுகிறார்கள். அந்தளவுக்கு கோலங்களை அழகாக போடுகிறார்கள்.

புள்ளி வைத்த கோலம், ரங்கோலி, கம்பி கோலம், சிக்கு கோலம் என நிறைய பெயர்களில் அழைக்கப்படுகிறது. ரங்கோலி என்பது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு ஓவியம் போல் போடப்படும் கோலமாகும். இதற்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. மேலும் வண்ண பொடிகளும் கிடைப்பதால் இந்த பொடிகளை டீ வடிகட்டியின் மூலம் வடிகட்டி மெல்லிய மாவுகளாக்கி , அதை வெள்ளை நிற கோலமாவில் கலக்கிறார்கள்.
சிலர் இரு நிறங்களை கலந்து புதியதொரு நிறத்தையும் உருவாக்குகிறார்கள். இதெல்லாமே கடவுளின் வரம், திறமை என்றுதான் சொல்ல வேண்டும். இது போல் கோலம் போடுபவர்களை பொங்கல் பண்டிகைகளில் தமிழக அரசும் தன்னார்வல அமைப்புகளும் ஊக்குவிக்கும் விதமாக கோலப்போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குகிறார்கள். இது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கிறது.

கிராமங்களிலும் டவுன்களிலும் பெரிய வீதிகளில் இரு புறமும் மக்கள் அழகான கோலங்களை போட்டிருப்பார்கள். அதை பலர் வேடிக்கை பார்த்து அதை நோட் செய்து வைத்துக் கொண்டு தாங்களும் வரைய முயற்சிப்பார்கள். இப்படித்தான் ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.
பொங்கல் என்றாலே பானை, கரும்பு வரைவார்கள், மாட்டு பொங்கலுக்கு மாடுகளையும் வரைந்திருப்பார்கள். அந்த வகையில் பொங்கலுக்கு இரு கோலங்களை எப்படி போடலாம் என்பதை பார்க்கலாம்.

அதாவது புள்ளி வைத்த கோலம் ஒன்று, புள்ளி வைக்காத ரங்கோலி கோலம் ஒன்று! 7 புள்ளிகள் நேர் புள்ளி 1 இல் முடிக்க வேண்டும். அதாவது 7 புள்ளிகளை வைத்துவிட்டு இரு புறமும் ஒற்றை படைகளில் புள்ளி வைக்க வேண்டும். 5, 3, 1 என்ற முடிக்க வேண்டும்.
இதில் ஒன்றாம் புள்ளி முடிவில் இருந்து 3 புள்ளியில் எதையும் இணைக்காமல் ஒரு கோடு போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு கீழே பானை போல் வரைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு 4 பக்கங்களிலும் 4 பானைகளை வரைய வேண்டும். பானைக்குள் ஒரு புள்ளி மீதமிருக்கும். அதை எதையும் செய்யாமல் கலர் கொடுத்துவிடுங்கள்.

பிறகு பானையின் வாய் பகுதியில் வெள்ளை நிறத்தில் பொங்கல் பொங்குவது போல் செய்துவிடுங்கள். இப்படி செய்யும் போது சைடில் ஒரு புள்ளி வீதம் 4 புள்ளிகள் இருக்கும். அதை கரும்பு வரைய பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே பானை கோலம் போட ஆர்டிஸ்ட்டாக இருக்க வேண்டும் என்றில்லை இந்த புள்ளிகளை வைத்தே கோலமிட்டுக் கொள்ளலாம். அது போல் இன்னொரு கோலம் 3 புள்ளிகள் சந்து புள்ளி 2இல் முடிக்க வேண்டும். அதில் புள்ளிகளை இணைத்து hexagon ஆக வரைந்து சுற்றி 6 மொட்டுகளை போல் வரைந்து அதிலும் அழகுப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் நிறங்களை கொடுக்கலாம். இப்படியாக சிறிது சிறிதாக கோலங்களை வரைந்து கற்றுக் கொள்ளுங்கள்.

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications