ஓய்வூதியதாரர்களுக்கு தரப்படும் பொங்கல் பரிசுத் தொகை 2 மடங்கு உயர்வு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.

அந்த வகையில் ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களை கவரும் விதமாக வெளியிட்ட தமிழக அரசு கடந்த சில நாட்களாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்கு இலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Pongal prize money given to pensioners has been increased by 2 times Tamil Nadu government

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு சட்டசபையில் அறிவித்தார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 ஊதிய உயர்வான இந்த மாதம் (ஏப்ரல்) 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் 50,000 விவசாய மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அறிவிப்பு இந்நேரம் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அறிவிக்கப்படவில்லை . இந்த நிலையில் இந்த வாரம் இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொதுவாக மத்திய அரசு எவ்வளவு அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதே அளவிற்குத்தான் தமிழ்நாடு அரசும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டது.

இந்த முறை மத்திய அரசு சார்பாக 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. இதே அளவு அல்லது 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி டூ மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு மட்டும் அரியர் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1080 ரூபாய் வரி இவர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக வழங்கப்படும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு

அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் | எடுத்துக்கொள்ளப்படும்

முன்பு இருந்த விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்று சட்டப் சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) உயர்வு அரியர் தொகையை வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள மே மாத சம்பளத்தோடு சேர்த்து அரியர் தொகை வங்கி கணக்குகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 55% ஆக உயர்த்தி மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இந்த 2% டிஏ உயர்வு கடந்த 78 மாதங்களில் மிக மிக குறைவானது. ஆனால் இப்போது, ​​2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கத்தில் மேலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. பணவீக்கத்தை வைத்தே அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படும். 8.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+