Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம்.. தாம்பரம் டூ கோயம்பேடு.. "இங்கே" தான் கிளம்பும் பஸ்.. பொங்கலுக்கு 19,484 ஸ்பெஷல் பஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ் தந்துள்ளது.. அந்தவகையில், 19,484 சிறப்பு பேருந்துகளை இயக்க போவதாக அறிவித்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது.. இதனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டுள்ளது.. வழக்கமாக பண்டிகை நேரத்தில், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்.

Pongal Surprise by Tamil Nadu Government and 19,484 special Buses for Pongal Festival, says Minister Sivasankar

சனிக்கிழமை: அதேபோல, இந்த முறை, சனிக்கிழமையன்றே விடுமுறை ஆரம்பமாகிவிடுவதால், 13 முதல் 17ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், ஜனவரி 12ம்தேதியே வெளியூருக்கு பயணமாக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.

ஏற்கனவே, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்துவிட்டது.. அதேபோல, வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன.. அதனால்தான், பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவானது. முன்னதாக, சிறப்பு பஸ்கள் 11-ந் தேதி முதல் இயக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

திடீர் ஸ்டிரைக்: அதாவது, 12, 13, 14 ஆகிய நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அதிகளவில் இருப்பதால் 3 நாட்களும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.. ஆனால், பஸ் தொழிலாளர்கள் திடீரென ஸ்டிரைக் அறிவித்துவிட்டார்கள்.. இதனால் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பும் தாமதம் ஆனது.. உடனே இதையே சாக்காக வைத்து, ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த துவங்கிவிட்டார்கள்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, வரும் 12ம் தேதி முதல், 19,484 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிறப்பு பஸ்கள்: அப்போது, பொங்கலுக்கான சிறப்பு பஸ்கள், வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை, சென்னையில் இருந்து இயக்கப்படும்.. 3 நாட்கள் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 4,706 சிறப்பு பஸ்கள் சேர்த்து இயக்கப்படும். 3 நாட்களுக்கு, 11,006 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மற்ற ஊர்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்கள் என ஒட்டுமொத்தமாக, 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன..

அரசு விரைவு பஸ்களை பொறுத்தவரை, பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.. அதேபோல, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு, கிளாம்பாக்கம் தவிர, வேறு எங்கிருந்தும் விரைவு பஸ்கள் இயக்கப்படாது.

போக்குவரத்து கழகம்: மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ் நிலையங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் முடிந்ததும், பிற மற்ற ஊர்களிலிருந்து சென்னை வரும் பயணியருக்காக, 16 முதல் 18ம் தேதி வரை, வழக்கமாக இயங்கும் 2,100 பஸ்களுடன், 4,830 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பிற ஊர்களில் இருந்து, 6,459 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பொங்கலுக்கு பிறகான நாட்களில், 17,589 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில், 5, தாம்பரம் சானடோரியத்தில் 1, கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. www.tnstc.in என்ற இணையதளம் வழியாகவும், tnstc என்ற மொபைல் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யலாம்.

மொபைல் எண்: மேலும் தகவல்களுக்கு, 94450 14450, 94450 14436 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 1800 4256151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதேபோல, 044 - 2474 9002, 2628 0445, 2628 1611 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்" என்றார் அமைச்சர் சிவசங்கர். தமிழக அரசின் இந்த சிறப்பு பேருந்துகள் அறிவிப்பானது பொதுமக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

இதனிடையே, தொழிற்சங்கத்தினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.. எனினும், அனைத்து இடங்களிலும் பேருந்துகள் சேவை வழக்கமாகவே இருப்பதாகவும், எங்கேயும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பேருந்து சேவைகள்: அதுமட்டுமல்ல, இன்று காலை செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் பேசியபோது, "சென்னையில் இருந்தபடியே, தமிழகம் முழுக்க இயக்கப்படும் பேருந்து சேவையை கண்காணித்து வருகிறேன். எங்காவது பேருந்து சேவைகள் குறைவாக இருந்தால் அதிகாரிகள் உரிய ஆய்வை நடத்துவார்கள்.

நான் விடிகாலை முதலே பல இடங்களில் பேசி வருகிறேன். எங்கும் பஸ் சேவையில் பாதிப்பு இல்லை. மழை பெய்யும் சில மாவட்டங்களில் மட்டும் ஊழியர்கள் வரத் தாமதமாவதால் பஸ் குறைவாக இயக்கப்படுகிறது. அதைத் தவிர வேறு எங்கும் பிரச்சினை இல்லை" என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+