எல்லா தகுதியும் இருந்தும் போட்டியிட விரும்பாத பொங்கலூர் பழனிச்சாமி மகன்.. என்ன காரணம்?
Recommended Video

சென்னை: கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியா தலைவராக விளங்கி வருபவர்களில் ஒருவர் பொங்கலூர் பழனிச்சாமி. அவரது மகன் பைந்தமிழ் பாரி. இந்ததேர்தலில் போட்டியிட சீட் கேட்பார் என எதிர்பார்ர்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை, விருப்ப மனுவும் தரவில்லையாம்
கடந்த 2014 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் பொங்கலூர் பழனிச்சாமி, இந்த முறை அவரது மகனுக்கு எம்.பி. சீட் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கேட்கவில்லை. எல்லாத் தகுதியும் இருந்தும் அவர் சீட் கேட்காமல் ஒதுங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கொங்கு மண்டல திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. மேலும், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயலாளராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

சீட் கேட்டு மனு தாக்கலா
இந்நிலையில் அவரது மகனும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான பைந்தமிழ் பாரி மக்களவை தேர்தலில் பொள்ளாச்சி அல்லது கோவையில் சீட் கேட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

விருப்ப மனுவே தரலையே
ஆனால், பைந்தமிழ் பாரி பணமே கட்டாதபோது, எப்படி போட்டியிடுவார் என கேள்வி எழுப்புகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். கடந்த முறை பொள்ளாச்சியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் பாரியின் தந்தைபழனிச்சாமி. அதற்கு காரணமே உட்கட்சி அரசியல் தான் என்கின்றனர் அவர்கள்.

ஆர்வம் காட்டவில்லை
மேலும், தேர்தலில் போட்டியிட பைந்தமிழ் பாரி ஆர்வம் காட்டாதது பற்றி விவரிக்கும் அவரது நண்பர்கள், கட்சியில் படிப்படியாக வளர்ந்து மாநகர, மாவட்ட, மாநில பொறுப்புகளுக்கு வந்த பாரியை வாரிசு அரசியல் செய்வதாக கோவை மாவட்ட திமுகவில் ஒரு தரப்பு விமர்சனம் செய்வதாக கூறுகின்றனர்.

எதிர்த் தரப்பினரின் புகார்
முன்பைக் காட்டிலும் கட்சிக்காக கடுமையாக பணியாற்றியும் தலைமை எதிர்த்தரப்பினர் கூறுவதை நம்புவதால் பைந்தமிழ் பாரி மனதளவில் நொந்து போயுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், பொள்ளாச்சியை ஈஸ்வரனுக்கு கொடுக்க வாய்ப்புள்ளதாலும், தலைமையின் சிக்னல் கிடைக்காததாலும் பைந்தமிழ் பாரி பணம் கட்டவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

எல்லா பலமும் உள்ளது
பண ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பலமானவர்தான் பைந்தமிழ் பாரி. அவருக்கு சீட் கொடுத்தால் பழனிச்சாமி இறங்கி வேலை செய்வாரும் கூட. மேலும் வெற்றியும் உறுதி என்கிறார்கள். ஆனால் பைந்தமிழ் பாரி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அமைதி காக்கிறார்.












Click it and Unblock the Notifications