பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ஆண் குழந்தைக்கான பொன் மகன் சேமிப்பில் கடன் வசதி இருக்கா? அசத்தல் திட்டம்
சென்னை: வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்ற பொன்மகன் சேமிப்பு திட்டம் எப்படி துவங்கப்பட்டது தெரியுமா? இந்த திட்டத்தில் கடன் வசதிகள் உண்டா? இதன் தற்போதைய வட்டி விகிதம் என்னவாக உள்ளது?
பெண் குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி, என அவர்களின் நலனில் எப்போதுமே அரசு அக்கறை கொண்டு வருகிறது. அதனால்தான், பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்ற ஒன்று மத்திய அரசால் 2015ல் கொண்டு வரப்பட்டது.

ஆண் குழந்தைகள்: அப்போது, ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்களும்கூட, தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு திட்டம் வேண்டும் என்று அஞ்சலகங்களை அணுகிக் கேட்க துவங்கிவிட்டார்களாம்.. அதனால்தான், ஏற்கெனவே உள்ள PPF என்ற பொது வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் "மைனர்" என வரைமுறைப்படுத்தப்படும் 18 வயது பூர்த்தி ஆகாதோருக்கான திட்டத்தின் கீழ் சேமிப்பை தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அந்தவகையிலேயே, பாலின சமன்பாட்டிற்காக, ஆண் குழந்தைகளுக்காகவே, தமிழக அரசால் தொடங்கப்பட்டது இந்த பொன்மகன் சேமிப்பு திட்டம்... இந்த திட்டம் 2015ம் ஆண்டு, தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முழுப்பெயர் பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் என்பதாகும்.
ஆண் குழந்தைகளை பெற்றவர்களும், தங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும், படிப்புக்காகவும் சிறு சேமிப்பாக இத்திட்டத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை இந்த திட்டத்தில் சேமிக்கலாம்.
தகுதிகள்: 10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) இந்த திட்டத்தில் இணையலா.. 10 வயதை பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இந்த திட்டத்தில் கணக்கை ஆரம்பித்துவிடலாம்..
குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் குழந்தைக்கு கிடையாது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது. அதேபோல இந்த திட்டத்தில் இணைய கல்வி தகுதியும் கிடையாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு உள்ளாகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தினை சார்ந்தவனாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு அருகிலிருக்கும் அஞ்சலகங்களுக்கு சென்று இந்த திட்டத்தில் இணையலாம்.. இன்டர்நெட் பேங்கிங் அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற ஆப் மூலமும் ஆன்லைனில் பணம் செலுத்தி இதில் இணைந்து கொள்ளலாம்.
ஆவணங்கள்: விண்ணப்ப படிவத்தை நிரப்பி தரும்போது, ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர்/பாதுகாவலரின் அடையாள சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி, ஆதார் கார்ட், பான் கார்டு, போட்டோ போன்ற ஆவணங்களை தரவேண்டியிருக்கும்.. ஆரம்ப வைப்புத்தொகையாக வெறும் ரூ.500 செலுத்தினாலே, குழந்தைக்கு பாஸ்புக் தந்துவிடுவார்கள்.
கடந்த 10 வருடங்களாகவே 7 சதவீதத்துக்கும் குறையாமல்தான் வட்டி வழங்கப்படுகிறது. இப்போதுள்ள வட்டி விகிதம் இந்த திட்டத்தில் 1.1% குறைவு ஆகும்.. உதாரணத்துக்கு மாதம் ரூ.1,000 செலுத்தினால், 15 வருடத்தில் ரூ.1,80,000 செலுத்தப்பட்டிருக்கும். இதற்கு வட்டியாக ரூ.1,35,578 கிடைக்கும். அப்படியானால் முதிர்வுத்தொகையாக ரூ.3,15,572, மொத்த 15 வருடங்களில் கிடைக்கும். ஆனால், வருடந்தவறாமல் நிதியாண்டின் மார்ச் 31க்குள் தவணையை செலுத்திவிட்டால், அபராதத்தை தவிர்க்கலாம்.
கடன் வசதி: சேமிப்புக் கணக்கு தொடங்கியதிலிருந்து 7 வருடத்துக்கு பிறகே இதில் பணம் எடுக்க முடியும்... அதேபோல, 4வது நிதியாண்டின் முடிவில் இருக்கும் பணத்தில் 50 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும்..
இந்த திட்டத்தின் இன்னொரு அம்சம், இதில் கடன் பெறும் வசதியும் உண்டு.. இதற்கு கணக்குத் தொடங்கி 3வது நிதியாண்டு தொடங்கியிருந்தால் மட்டுமே இந்த கடன் பெற முடியும்.. அதுவும் 2வது நிதியாண்டு முடிவிலுள்ள தொகையின் 25% மட்டும்தான் கடனாக பெற முடியும்.
மொத்த பணம்: இந்த கடனை 36 மாதங்களுக்கு முன்பு அடைத்துவிட்டால், 1 சதவீதம் மட்டுமே வட்டியாக வசூலிக்கப்படும். அதற்கு மேல் 6 சதவீதம் வட்டி வரலாம். இதுபோல நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் எடுக்க முடியும்,.. ஒருவேளை நீங்கள் 2வது முறையாக கடன் வாங்க நினைத்தால், முதல் கடனை மொத்தமாக அடைத்திருக்க வேண்டும். ஆனாலும், கடைசிவரை பணமே எடுக்காமல், கடனும் வாங்காமலேயே இருந்தால், முழு சேமிப்பு பலனை நாம் சுளையாக அள்ளலாம்.
ஒருவேளை, இந்த திட்டத்தின்போது குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டால், குழந்தை 18 வயதை பூர்த்தியடைந்திருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு பணம் கிடைக்கும். இல்லாவிட்டால், அவரது பாதுகாவலர் பணத்தை பெறலாம்.
உத்தரவாதம்: மொத்தத்தில், முதலீட்டிற்கு அரசாங்கத்தின் உத்திரவாதம் இருப்பதால், பணத்தை இழக்கும் அபாயம் கிடையாது என்பதால், மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது இந்த திட்டம்..!!












Click it and Unblock the Notifications