பொன் மகன் சேமிப்பு திட்டம்.. ஆண் குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள பொன்மகன் சேமிப்பு.. ரூ.500 போதுமே
சென்னை: பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் யார் யார் சேரலாம்? எவ்வளவு வட்டி? முதிர்வுக்காலம் மற்றும் பிற சலுகைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் அஞ்சலக அதிகாரி தரப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் விளங்கி வருகிறது.. ஆண்களுக்கு மட்டும் இருக்கும் சிறுசேமிப்பு திட்டம் இதுவென்பதால், பொதுமக்களிடம் இந்த திட்டத்துக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த 2015-ல் தொடங்கப்பட்டது இந்த அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்.

பாதுகாவலர்: 10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கை திறக்கலாம்... 10 வயதை பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இந்த திட்டத்தில் கணக்கை துவங்கலாம்.
குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் குழந்தைக்கு கிடையாது. ஆனால், NRI என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது. அதேபோல இந்த திட்டத்தில் சேருவதற்கு வயது வரம்போ, கல்வி தகுதியோ கிடையாது. பொன்மகன் சேமிப்புத் திட்டம் என்றாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் சேரலாம்.
தபால் நிலையம்: தபால் நிலையத்தில் இந்த திட்டத்தை யார் வேண்டுமானாலும் துவங்கலாம்.. இதைத்தவிர, இன்டர்நெட் பேங்கிங் அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற ஆப் மூலமும் ஆன்லைனில் பணம் செலுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தை நிரப்பி தந்தாலே, இந்த திட்டத்தில் இணையலாம். ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர்/பாதுகாவலரின் அடையாள சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி, ஆதார் கார்ட், பான் கார்டு, போட்டோ போன்ற ஆவணங்கள் இதற்காக தேவைப்படும். ஆரம்ப வைப்புத்தொகை வெறும் ரூ.500 செலுத்தினால், குழந்தைக்கு பாஸ்புக் தந்துவிடுவார்கள்.
வைப்புத்தொகை: இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை சேமிக்கலாம். இப்போதைக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
இருந்தாலும், ஒவ்வொரு நிதிக் காலாண்டு அதாவது 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்... மத்திய நிதியமைச்சகத்தால் மாற்றப்படும் வட்டி விகிதங்களை அஞ்சலகங்களிலோ அல்லது இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ (Post Office Saving Schemes (indiapost.gov.in) தெரிந்துகொள்ளலாம்.
செல்வமகள்: ஆனால், கடந்த 10 வருடங்களாகவே 7 சதவீதத்துக்கும் குறையாமல்தான் வட்டி வழங்கப்படுவதாக அஞ்சலக சேமிப்பு வங்கி அதிகாரி தரப்பில் கூறப்படுகிறது. அதாவது செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைவிட இப்போதுள்ள வட்டி விகிதம் இந்த திட்டத்தில் 1.1% குறைவு.
உதாரணமாக, மாதம் ரூ.1,000 செலுத்தினால், 15 வருடத்தில் ரூ.1,80,000 செலுத்தியிருப்போம். அதற்கு வட்டியாக ரூ.1,35,578 கிடைக்கும். முதிர்வு தொகையாக ரூ.3,15,572 பணம் 15 வருடங்களில் நமக்கு கிடைக்கும்.
வசதிகள்: இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் வசதியும் உண்டு.. ஆனால், அதற்கு கணக்கு ஆரம்பித்து 3வது நிதியாண்டு தொடங்கியிருக்க வேண்டும். 2வது நிதியாண்டு முடிவிலுள்ள தொகையின் 25 சதவீதம் மட்டுமே கடன் பெற முடியும். அந்த கடனையும் 36 மாதங்களுக்கு முன்பு அடைத்துவிட்டால், 1 சதவீதம் மட்டும்தான் வட்டியாக வசூலிக்கப்படும். அதற்கு மேல் 6 சதவீதம் வட்டி வரலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் எடுக்க முடியும்.
பணம் செலுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்தால், இறந்துவிட்டால், 18 வயதை பூர்த்தியடைந்திருக்கும் பட்சத்தில், குழந்தைக்குப் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால், அவரது பாதுகாவலர் பணத்தைப் பெறலாம்.
அபராதம்: ஒரு நிதியாண்டில் ஒரு முறையாவது பணம் செலுத்த வேண்டும். தவறினால், அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். அப்படியானால் 15 வருடங்கள் வரை பணம் செலுத்த வேண்டும். அதற்கு பிறகு, ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் முதிர்வோடு சேமிப்பை எடுக்காமல் புதுப்பிப்பு செய்யும்போது, அந்த 5 ஆண்டு காலத்துக்கும் உண்டான வட்டி சேர்த்து வழங்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications