சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் மே 12 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
சைவ வைணவ சமயங்கள் பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மே 12 நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் வழங்கியுள்ளது.

சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு, எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், இன்று நேரில் ஆஜராகும்படி பொன்முடிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சவுந்திரபாண்டியன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடி நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதால், இன்று ஒரு நாள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து, மே 12 ஆம் தேதி ஆஜராகும்படி, பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.
முன்னதாக, சர்ச்சைக்குள்ளான இந்த பேச்சால் பொன்முடியின் கட்சி பதவியும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பொன்முடிக்கு சீட் வழங்கவும் திமுக தலைமை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு.. தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொலை வழக்கில் 76 நாளில் தீர்ப்பு!












Click it and Unblock the Notifications