இடைத்தேர்தலை சந்திக்கும் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி! திமுகவில் யாருக்கு வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டுகாலம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதால் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இழக்கிறார் பொன்முடி.

இதனால் அவரது திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்த விவரங்கள் முறைப்படி சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு கோப்புகள் சென்றவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ponmudis Thirukovilur Constituency to meet by-election! Who has a chance in DMK?

விழுப்புரம் மாவட்டத்திலேயே மிகப்பெரிய தொகுதி திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதியில் கடந்த 1952ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ், அதிமுக தலா 4 முறையும், திமுக 5 முறையும், தேமுதிக, பாமக, தலா 1 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், திருவெண்ணெய்நல்லூர் என 3 பேரூராட்சிகளும் 95 ஊராட்சிகளும் உள்ளன.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.எடையார் என்ற கிராமம் தான் பொன்முடியின் சொந்த ஊராகும். இதனால் தான் கடந்த 2016ஆம் ஆண்டு விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூருக்கு ஷிஃப்ட் ஆனார் பொன்முடி. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக பாஜக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாவட்ட தலைவர் கலிவர்தனை விட 58,339 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார் பொன்முடி.

இதனிடையே இப்போது திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், பொன்முடியின் 2 மகன்களில் ஒருவருக்கு திமுக சீட் கொடுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கட்சி எந்த சூழலிலும் கைவிடாது என்பதை மற்றக் கட்சிக்காரர்களுக்கும், அமைச்சர்களுக்கும் உணர்த்தும் விதமாக பொன்முடி குடும்பத்திலிருந்தே ஒருவருக்கு சீட் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி திருக்கோவிலூர் தொகுதிப்பக்கம் இப்போதே தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டார். புரட்சி பாரதம் மாநாட்டில் கலந்துகொள்ள நேற்றிரவு விழுப்புரம் சென்ற அவர், பொன்முடி விவகாரம் குறித்தும் இடைத்தேர்தல் பற்றியும் அங்குள்ள கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+