இன்று ஓபிஎஸ்.. நாளை எடப்பாடி..? முதுகில் குத்த ரெடி.. "பொன்னையன் குரல்" ஆடியோ சொல்வது இதுதான்?
சென்னை: அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பொன்னையன், கட்சி நிலவரம் குறித்துப் பேசும் ஆடியோ ஒன்று லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல அரசியல் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தாண்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான் அதிமுகவின் மூத்த தலைவரான பொன்னையன் பேசிய ஆடியோ ஒன்று லீக் ஆகி பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

பல உட்கட்சி ரகசியங்கள்
இணையத்தில் லீக்காகி உள்ள இந்த ஆடியோவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் என்பவர் உடன் பேசும் பொன்னையன், பல உட்கட்சி ரகசியங்களைப் பகிர்ந்து உள்ளார். குறிப்பாக, அதிமுகவிற்குள் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது சொந்த சாதி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கூட இல்லை என்று கூறி அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளார்.

மறுப்பு
ஆனால், இந்த ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது இல்லை என பொன்னையன் மறுப்பு தெரிவித்து உள்ளார். ஆனால் மறுபுறம் கே.எஸ்.கோலப்பனோ, பொன்னையன்தான் பேசினார் என்று கூறியதோடு மட்டுமின்றி எத்தனை மணிக்குப் பேசினார், எவ்வளவு நிமிடங்கள் பேசினார் என்பது வரை ஆதாரம் உள்ளதாகக் கூறி உள்ளார். இது ஒருபக்கம் இருக்க, இந்த ஆடியோவில் இருவரும் என்ன பேசி உள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.

எடப்பாடி தவறிவிட்டார்
அந்த ஆடியோவில், எடப்பாடி ஓபிஎஸ்சுடன் சமாதானத்திற்கு ரெடியா இருந்தார் என்றும் இருப்பினும் அவரிடம் போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால்தான் அவரால் ஓபிஎஸ் உடன் சமாதானமாகப் போக முடிவில்லை என்றும் அதில் பொன்னையன் கூறுகிறார். மேலும், எடப்பாடி ஆட்சி செய்த நாலரை ஆண்டுகளில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களையும் எடப்பாடி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவில்லை என்றும் இதன் காரணமாகவே இப்போது எடப்பாடிக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமல் போனது என்றும் குறிப்பிடுகிறார்.

ஆதரவு இல்லை
எடப்பாடிக்கு ஆதரவாகப் பொதுக்குழு மேடைகளில் ஆக்ரோஷமா குரல் கொடுத்தவர் சிவி சண்முகம். இவர் தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எடப்பாடி சமூகத்தைச் சேர்ந்த 42 எம்எல்ஏக்களில் எடப்பாடிக்கு வெறும் 9 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டும் உள்ளது என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார் பொன்னையன்.

அந்த 4 பேர்
மீதும் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து முன்னாள் அமைச்சர்களான தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களாக மாற்றி வைத்து உள்ளதாகவும் பொன்னையன் கூறுகிறார். இதனால் தான் எடப்பாடி வேறு வழியில்லாமல் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களான கேபி.முனுசாமி, சிவி.சண்முகம் மற்றும் தான் சமூகத்தையே சேர்ந்த தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் பேச்சையும் மீறி எதுவும் செய்ய முடியாத சூழலில் உள்ளதாகவும் பொன்னையன் கூறுகிறார்.

பகீர் தகவல்
இதையெல்லாம் விட அந்த ஆடியோவில் பொன்னையன் இன்னொரு ஷாக் கொடுத்து இருந்தார். அதாவது இதே நிலை தொடர்ந்தால் கே.பி. முனுசாமி கூட எடப்பாடியை ஓரம் கட்டிட்டுவிட்டு, ஒற்றைத்தலைமைக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு தான், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டு இருப்பதாகவும் சொல்லி பொன்னையன் ஷாக் கொடுத்துள்ளார்.

மீண்டும் சிக்கல்
எடப்பாடிக்கு அவரது ஆதரவாளர்களும் அவ்வளவு ஏன், சொந்த சாதிக்காரர்களே கூட ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு இருப்பது போலவே பொன்னையன் கூறுகிறார். இதனால் அதிமுக உட்கட்சி விவகாரம் இப்போது முடிந்தது போலத் தெரிந்தாலும், அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications