Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்ப அவங்க "2 பேரும்" சேரப்போறாங்களா.. "தெரிஞ்சும் தெரியாம".. பூங்குன்றன் சொன்ன "அந்த" வார்த்தை.. ஓஹோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கொங்கு மண்டலத்தில் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தை நீங்கள் பெற்று இருக்கிறீர்களே.. இதே தேர்தல், தென் மண்டலத்தில் நடந்திருந்தால் நீங்கள் எவ்வளவு ஓட்டு வாங்கி இருப்பீர்கள் என்பது தான் என்னுடைய கேள்வி' என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வினா எழுப்பி உள்ளார்.. அத்துடன் முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் அதிமுகவின் நலன்கருதி விடுத்துள்ளார்.. என்ன அது?

பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது அதிமுக.. இறுதியில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவானது, 43,923 வாக்குகளை மட்டுமே பெற்றது... ஆனாலும் டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லி வந்த அதிமுகவுக்கு இந்த தேர்தல் ஒரு சவாலாகவே இருந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர்.

 40000

40000

ஆனால், திமுகவின் அதிரடி வியூகத்துக்கு முன்னால் எதுவும் எடுபடாமலேயே போய்விட்டது.. போதுமான வெற்றியை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்கவில்லை என்ற கருத்தே தற்போது அழுத்தமாக வேரூன்றப்பட்டு வருகிறது.. இத்தனைக்கும் எடப்பாடிக்கு, இலை சின்னம் கிடைத்தாகிவிட்டது.. ஓபிஎஸ் தரப்பும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி வழிவிட்டது.. வழக்கமாக அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும், அமமுகவும் ஒதுங்கி கொண்டது.. இது எல்லாவற்றையும்விட, எடப்பாடிக்கு சாதகமான தேர்தல் களம், சொந்த மண்ணில் அமைந்தது. சொந்த சாதி வாக்குகள் இருந்தும்கூட, வெறும் 40 ஆயிரம்தான் ஓட்டுக்கள் என்பதைதான் பலராலும் ஜீரணிக்க முடியவில்லையாம்.

 யுவராஜ் பவர்

யுவராஜ் பவர்

2 நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான தராசு ஷ்யாம், ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ஒருவேளை, ஈரோடு கிழக்குக்கு பதிலாக தென்மாவட்டங்களில் இடைத்தேர்தல் வந்திருந்தால், எடப்பாடி எவ்வளவு ஓட்டு பெற்றிருப்பார்? எடப்பாடிக்கு கிடைத்த இந்த 40 ஆயிரம் ஓட்டுக்களும், எடப்பாடிக்கு மட்டுமே கிடைத்த ஓட்டுக்களாகவும் கருத முடியாது. அந்த ஓட்டுக்களில், ஓபிஎஸ்ஸுக்கும் பங்கு உள்ளது.. தமாகா யுவராஜுக்கும் பங்குள்ளது.. எல்லா தலைவர்களும் வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருப்பார்கள்.. அந்த வாக்கு வங்கியை சேதாரம் இல்லாமல் காப்பாற்ற வேண்டியது அடுத்தடுத்து வர வேண்டிய தலைவர்களின் பொறுப்பு.. ஆனால், அது அதிமுகவில் இப்படி கறைந்து கொண்டிருக்கிறதே" என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

பூங்குன்றன்

பூங்குன்றன்

இப்படிப்பட்ட சூழலில்தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.. சமீபகாலமாக, அதிமுக நலனில் அக்கறை காட்டி வருபவர் பூங்குன்றன்.. சில சமயம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதான அக்கறையையும் வெளிப்படுத்தி வருபவர்.. தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தல் குறித்து ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.. "ஒருவருக்கொருவர் பேசி, தொண்டர்களின் ஆலோசனைகளை கேட்டு, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முயற்சி செய்யுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து, பூங்குன்றன் ஒரு அறிக்கையையும் கட்சியின் நலன் கருதி வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

தேர்தல்

தேர்தல்

இடைத்தேர்தல் குறித்து ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. இது மிகப் பெரிய தோல்வி அல்ல, உண்மைதான்; அம்மா அவர்கள் இருக்கும்போதும் இடைத்தேர்தலில் தோல்வியுற்று இருக்கிறார்கள், உண்மைதான்; ஆளும் கட்சி தான் தேர்தலில் ஜெயிக்கும், உண்மைதான்.. வெற்றி பெற்றால் விடா முயற்சி, தோல்வியுற்றால் வீண் முயற்சி என்பார்கள், உண்மைதான்; பணம் ஜெயித்திருக்கிறது. உண்மைதான். என்னுடைய கேள்வி எல்லாம் கொங்கு மண்டலத்தில் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். இதே தேர்தல் தென் மண்டலத்தில் நடந்திருந்தால் நீங்கள் எவ்வளவு ஓட்டு வாங்கி இருப்பீர்கள் என்பது தான். இந்த கணக்கு அவசியமான ஒன்று. ஏனென்றால் ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அரவணைக்க வேண்டும். ஆட்சி அமைக்க ஒரு சாரரை நம்பி பயணம் செய்யக் கூடாது.

 டபுள் ஹேப்பி

டபுள் ஹேப்பி

எல்லோருடைய ஆதரவும் உங்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு நல்லது. நான் சொல்லும் கருத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பதவிக்காக துதிபாடிக் கொண்டிருப்பவர்கள் என்னை வசை பாடுவார்கள். கொங்கு மண்டலம் தலைவர் காலத்திலிருந்து செல்வாக்கு பெற்ற மண்டலம் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. எப்போதும் கழகத்திற்காக ஓட்டுக்களை இரட்டை இலையில் பதிப்பவர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

 ஆசை ஆபத்து

ஆசை ஆபத்து

தலைவராக இருப்பவர் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதற்கான காரியத்தை முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் கழகம் நன்றாக இருக்கும் என்பது தான் தொண்டர்களுடைய நம்பிக்கை. அதுவே என்னுடைய வேண்டுகோளும்..! அதிமுகவிற்கு ஆசைப்படுபவர்களால் உன் உயிருக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என்று என் நண்பர்கள் சொல்வார்கள். நீங்கள் பிரிந்திருந்தால் தான் எனக்கு நல்லது. நீங்கள் சேர்ந்து விட்டால் என்னைத்தான் முதலில் வம்புக்கு இழுப்பீர்கள். என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னை வளர்த்த கழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். நீங்கள் ஒருவருக்கொருவர் பேசி, தொண்டர்களின் ஆலோசனைகளை கேட்டு, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முயற்சி செய்யுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+