பரம ஏழை.. ப. சிதம்பரம்.. மகனை கிரிக்கெட் பார்க்க பாரின் அனுப்பும் சிவகங்கை சீமான்.. இது தமிழிசை
சென்னை:மகனை வெளிநாட்டுக்கு கிரிக்கெட் பார்க்க அனுப்பும் பரம ஏழை ப. சிதம்பரம், சிவகங்கை சீமான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் முதல்கட்டமாக நாட்டில் உள்ள 2 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.அந்த திட்டத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது.

வாக்களிக்க லஞ்சம் கொடுக்கும் நாள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார். டுவிட்டர் பதிவில் அவர் தேர்தல் ஆணையத்தையும் சாடியிருந்தார்.
5 பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்துக்கு நாளொன்றுக்கு ரூ.17 உதவித் தொகையா? பிச்சையா? லஞ்சமா? என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் சிதம்பரத்துக்கு சூசகமாக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
அவரும் டுவிட்டரில் ப. சிதம்பரத்துக்கு பதில் அளித்திருக்கிறார். ப. சிதம்பரத்தின் டுவிட்டரை குறிப்பிட்டு தனது வலைத்தளப்பக்கத்தில் தமிழிசை பதிவிட்டதாவது:
பெயில் குடும்பத்து புலம்பல்? 60 ஆண்டுமாறிமாறி சுருட்டிய ஊழல்வாதிகளின் கட்சி நிதி?அமைச்சருக்கு தேர்தல் காய்ச்சல்? பித்தம்? பயம்? விவசாயிகளைபற்றி நீலிக்கண்ணீர் சிந்தும் சிவகங்கை சீமான்?10 கோடி பிணை கட்டி மகனை கிரிக்கெட் பார்க்க வெளிநாடு அனுப்பும் பரம ஏழை ப சிதம்பரம்? https://t.co/Y7zIRJAYJW
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) February 24, 2019
பெயில் குடும்பத்து புலம்பல்? 60 ஆண்டுமாறிமாறி சுருட்டிய ஊழல்வாதிகளின் கட்சி நிதி?அமைச்சருக்கு தேர்தல் காய்ச்சல்? பித்தம்? பயம்? விவசாயிகளை பற்றி நீலிக் கண்ணீர் சிந்தும் சிவகங்கை சீமான்? 10 கோடி பிணை கட்டி மகனை கிரிக்கெட் பார்க்க வெளிநாடு அனுப்பும் பரம ஏழை ப. சிதம்பரம்? என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications