பஞ்சாயத்து ஓவர்! சமாதானம் பேசிய அதிமுக தலைவர்கள்.. “நல்ல டீல்”.. கூல் ஆன பூவை ஜெகன்மூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். புரட்சி பாரதம் கட்சிக்கு சீட் ஒதுக்காததால் அதிருப்தியில் இருந்த நிலையில், அதிமுக தலைவர்கள் அவரை சமாதானம் செய்துள்ளனர்.

அதிமுக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், வலுவான கூட்டணியை கட்டமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வந்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல் கட்சியாக புரட்சி பாரதம் உள்ளதக அறிவித்தது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி அறிவித்திருந்தார்.

Poovai Jaganmurthy says that the Puratchi Bharatham party will continue in AIADMK alliance

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம்: புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்பட்டது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் வர உள்ளன. அதில் புரட்சி பாரதம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த மாநாடு, தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாக இருக்கிறது. புரட்சி பாரதம் கட்சியின் இந்த மாநாடு பலரது தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 40க்கு 40 நாங்கள் தான் என நினைத்தவர்களுக்கு இந்த மாநாடு தூக்கத்தை கெடுத்திருக்கிறது." எனப் பேசி இருந்தார்.

சீட் கேட்ட பூவை ஜெகன்மூர்த்தி: தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி, பல முறை அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடர்வதை உறுதி செய்ததோடு, அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக கேட்க உள்ளோம். சொந்த தொகுதியான திருவள்ளூரை அழுத்தமாக கேட்போம். அந்தத் தொகுதியை பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறி வந்தார்.

புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி பாரதம் கட்சிக்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதனால் புரட்சி பாரதம் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

சீட் தராததால் அப்செட்: அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு அண்மையில் முடிவடைந்த நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது. அதேபோல தேமுதிகவுக்கு விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகள் வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்ற 33 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த புரட்சி பாரதம் கட்சிக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் பூவை ஜெகன்மூர்த்தி அதிர்ச்சியடைந்தார். பூவை ஜெகன்மூர்த்தி கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலையில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.

ஏமாற்றம்: இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த பூவை ஜெகன் மூர்த்தி, "ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு கடைசியாக ஏமாற்றம் கிடைத்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே பேசும்போதே சீட் இல்லை என்று கூறி இருந்தால் மனம் ஆறியிருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் கை விரித்த காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் புரட்சி பாரதம் கட்சியினர் கொந்தளிப்போடு, ஏமாற்றத்தோடு உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தொடர்வோமா, கூட்டணியில் இருந்து விலகிவிடுவோமா, அல்லது வேறு கூட்டணியில் சேர்வோமா என்பது பற்றி விரைவில் அறிவிப்போம். நம்பிக்கையோடு இருந்த நிலையில் இப்போது ஏமாந்துவிட்டோம். பல நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகலாம் எனக் கூறியுள்ளனர். பரிசீலனை செய்து முடிவை அறிவிப்போம் எனத் தெரிவித்திருந்தார்.

மனம் மாறிய பூவை ஜெகன் மூர்த்தி: இந்நிலையில், இன்று பூந்தமல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பூவை ஜெகன்மூர்த்தி. அப்போது பேசிய அவர், "அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்." என்றார்.

மேலும், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் தொடரலாம் என கூறியதால் அதில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் தொடர்கிறோம்: தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக பாடுபடுவோம். இன்னும் மூன்று நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் திருவள்ளூர் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வர உள்ளனர். புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+