வீடியோவை நீக்கினால் போதுமா? இர்பானால் சிக்கலில் நிவேதிதா! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? பரபர ட்விஸ்ட்!?
சென்னை: கருவில் இருந்தபோது குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கிய பிரபல யூட்யூபரான இர்பான், தற்போது அதே குழந்தை பிறந்த போது தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டியதால் சிக்கலில் சிக்கி உள்ளார். தற்போது யூட்யூபில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படக் கூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல யூட்யூபரான இர்பான் தனது இர்ஃபான்ஸ் வியூ சேனலில் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். மேலும் தனது திருமணம், தனது வீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டார்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இர்பான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவமனையில் சோதித்ததோடு, அதனையும் யூட்யூபில் அறிவித்தது பெரிய பேசு பொருளானது.
இதன காரணமாக யூட்யூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது இதற்கிடையே தனது செயலுக்கு இர்பான் மன்னிப்பு கேட்டதை அடுத்து தமிழக மருத்துவத் துறையின் நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இர்பான் கடந்த ஜூலை மாதம் அவரது மனைவிக்கு பிரசவம் ஆகியிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்ற நிலையில் அங்கு இர்பானும் சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் அவரது யூடியூப் சேனலில் நேற்று ஒரு வீடியோ வெளியானது. அதில் கருவுற்ற தனது மனைவியுடன் இர்பான் பேசுவது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, அறுவை சிகிச்சைக்கு தயாராவது, பிரசவம் நடைபெற்றது என பல்வேறு காட்சிகள் இருந்தன. இந்த நிலையில் வீடியோவில் 11வது நிமிடத்தில் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது.
இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அரசு பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்குக்குள் செல்ல வேண்டும். மேலும் கத்தரிக்கோல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மட்டுமே கையாள வேண்டும். ஆனால் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது சட்டப்படி தவறு என மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை பறந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு மருத்துவ துறை அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூட்யூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து தானாகவே முன்வந்து யூட்யூபர் இர்பான் அந்த வீடியோவை நீக்கிவிட்டார். இதற்கிடையே இர்பான் மற்றும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்திருப்பதாக சுகாதாரத் துறையினர் கூறினர். இர்பான் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இளங்கோவன் என்பவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் உரிய பயிற்சி இன்றி மருத்துவ உபகரணங்களை பயன்படுத்திய இர்பான் மட்டும் மற்றும் அவரை அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அனுமதித்த மருத்துவர் நிவேதிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் இர்பானின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் மற்றும் ஏற்கனவே டவுன்லோட் செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் முறையான சிகிச்சை இன்றி மருத்துவ உபகரணங்களை கையாளுதல் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் இர்ஃபான் கைதாகவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் மருத்துவர் நிவேதிதா மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதோடு சோழிங்கநல்லூரில் இருக்கும் அந்த தனியார் மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications