இரும்பு ராடால் அடித்து பன்றி இறைச்சி பக்கோடா கடைக்காரர் கொலை... பல்லாவரத்தில் பரபரப்பு
சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பன்றி இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்தவரை, மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லாவரம் அருகே உள்ள நாகல்பேணி ஆதம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் மகன், மகள் உள்ளனர். சீனிவாசன் திருநீர்மலை நாகல்கேணி சாலையில் பன்றி இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்தார்.

கடையை நடத்தி முடித்து விட்டு, நேற்று நள்ளிரவில் வீடு திரும்பிய இவரை வீட்டருகே துரத்தி வந்த மர்ம கும்பல், இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்றிகளை வளர்ப்பவர்களுக்கு, தெரியாமல் சீனிவாசன் பன்றிகளை பிடித்ததால் ஏற்பட்ட முன் விரோதத்தில் திருநீர்மலை பகுதியை சேர்ந்த பன்றி வியாபாரிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications