"தாம்பத்யம்".. மொத்தம் 3 மனைவிகள்.. அந்தரங்க வீடியோக்கள்.. வசமாக சிக்கிய நபர்.. அதிர்ந்த போலீஸ்

மனைவிகளை அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் கைதானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொத்தம் 3 மனைவிகள்.. 3 பேரிடமும் தாம்பத்யத்தின்போது எடுத்த போட்டோக்களை வைத்து கொண்டு மிரட்டி கொண்டிருந்தார் ஒரு ஐடி ஊழியர்.. கடைசியில் அவரை தூக்கி உள்ளே வைத்துவிட்டது சென்னை போலீஸ்..!

ஐதராபாத்தை சேர்ந்த பெண் அவர்.. ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்.. இவர் திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸில் ஒரு புகார் தந்தார்.

அதில், "திருமண வெப்சைட் மூலம் சென்னை தாம்பரத்தை சேர்ந்த சபீக் அகமது என்ற ஐடி இன்ஜினியரை, கடந்த வருடம் 3வது திருமணம் செய்து கொண்டேன்... சபீக் அகமதுவுக்கும் இது 3வது திருமணம்... கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்தபோது, நான் கர்ப்பமானேன்.

 சபீக் அகமது

சபீக் அகமது

இது பிடிக்காமல் என்னை கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அபார்ஷன் செய்தார். இதுகுறித்து நான் பல்லாவரம் ஸ்டேஷனில் புகார் தந்தேன்.. பிறகு கணவருடன் வாழ பிடிக்காமல் ஐதராபாத்தில் உள்ள என்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில், சபீக் அகமது எனக்கு போன் செய்து, குடும்பம் நடத்தும்படி அழைத்தார். நான் வாழ மறுத்துவிட்டேன்..

 வீடியோ

வீடியோ

இதனால் ஆத்திரமடைந்த அவர், கல்யாணத்திற்கு பிறகு நாங்கள் 2 பேரும் ஒன்றாக இருந்த அந்தரங்க வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு என் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார். என்னுடைய வாட்ஸ் அப் நம்பருக்கு வீடியோ, போட்டோக்களை அனுப்பி மிரட்டி வருகிறார். அதனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

 சபீக் அகமது

சபீக் அகமது

இதையடுத்து, போலீசார் இந்த புகாரின் பேரில் விசாரணையை ஆரம்பித்தனர்.. சபீக் அகமதுவையும் பிடித்து விசாரித்தனர்.. சபீக் அகமது பீகாரை சேர்ந்தவராம்.. பிசினஸ் விஷயமாக சென்னைக்கு சில வருஷங்களுக்கு முன்புதான் வந்துள்ளார்.. முதலில் கான்பூரை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்துள்ளார்... ஆனால், சண்டை போட்டுவிட்டு பிரிந்து விட்டார். இதற்கு பிறகு, அவர்கள் இருவரும் தாம்பத்தியத்தின்போது இருந்த வீடியோவை காட்டி மிரட்டி உள்ளார்.. இதுகுறித்து அந்த பெண்ணும் கான்பூர் ஸ்டேஷனில் புகார் தந்திருக்கிறார்.

கைது

கைது

இதற்கு பிறகு பெங்களூரை சேர்ந்த இன்னொரு பெண்ணை சபீக் கல்யாணம் செய்துள்ளார்.. அவரிடமும் சண்டை போட்டு கொண்டு பிரிந்துவிட்டார்.. அவரிடமும் இதுபோலவே வீடியோ காட்டி மிரட்டி உள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சபீக் அகமதுவை போலீசார் கைது செய்தனர்... அதுமட்டுமல்ல, அவரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ, போட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். இப்போது சபீக் புழலில் உள்ளார்.. இவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான், இன்னும் எத்தனை பெண்களை ஏமாற்றி இருப்பார் என்ற விவரங்கள் வெளியே வரும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+