Euro2020.. 80 நிமிசம் பார்த்தேன்.. ஒன்னுமில்லை.. சாப்பிட போனேன்.. 3 கோல்.. அடேய்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: " 80 நிமிஷம் உட்கார்ந்து பார்த்தேன்.. ஒரு கோல் கூட விழலை.. சரி சாப்பிட்டு வந்து பார்ப்போம்னு கிளம்பிப் போய்ட்டு திரும்பி வந்தா, 3 கோல் போட்டு வச்சிருக்கானுக.." இப்படித்தான் நேற்று பலரும் ஆச்சரியப்பட்டு சந்தோஷமாக புலம்பிக் கொண்டிருந்தனர் போர்ச்சுகல், ஹங்கேரி இடையிலான ஈரோ கோப்பை 2020 போட்டி குறித்து.

போர்ச்சுகல் - ஹங்கேரி இடையிலான இப்போட்டியில் நேற்று உலகம் முழுவதும் பெரும் வைரல் ஆனது. குறிப்பாக இந்தியாவிலும் இப்போட்டியை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். காரணம் 2, ஒன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2வது, அவர் ஏற்படுத்திய கோக் சர்ச்சை. இரண்டும் சேர்ந்து கொள்ளவே போட்டி சூடு பிடித்து விட்டது.

ஐரோப்பிய ரசிகர்களைப் போலவே இந்திய ரசிகர்களும் நேற்று இப்போட்டியை கொண்டாடித் தீர்த்து விட்டனர். டிவிட்டரில் போட்டி குறித்த மீம்ஸ்களையும், கமெண்ட்டுகளையும் அதிகம் பார்க்க முடிந்தது. அதிலிருந்து உங்களுக்காக சில.

என்னடா இது

என்னடா இது

80 நிமிசம் வரைக்கும் பார்த்தேன். ஒன்னுமில்ல. சாப்பிட போனேன் 3 கோல் போட்டிருக்கானுங்க.. அடேய்களா. என்று இந்த ரசிகர் அங்கலாய்த்துள்ளார். அதற்கு இன்னொருவர், 80 நிமிஷம் வரைக்கும் இருந்த நீங்க கடைசி பத்து நிமிஷத்தையும் பார்த்திருக்கலாமே.. பாவம் பண்ணிட்டீங்க பாஸ் என்று கலாய்த்துள்ளார். உண்மையில் அந்த பத்து நிமிடத்தில்தான் சொர்க்கத்தைக் காட்டி விட்டுப் போனார் ரொனால்டோ.

அபாரமான 15 நிமிடங்கள்

அபாரமான 15 நிமிடங்கள்


இப்போட்டியின் கடைசி 15 நிமிடங்கள்தான் பிரமாதமாக இருந்தது. இதுகுறித்து இந்த ரசிகர் கூறுகையில், அசத்தல் 10 மினிட்ஸ், நான் எல்லாம் 15 நிமிடம் தான் பார்த்தேன், அதிலும் அந்த 3 வது கோல், how ரொனால்டோ setup the கோல், spectacular என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால்தான் ரொனால்டோவுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்!

திரும்பத் திரும்பத் தவறாது

திரும்பத் திரும்பத் தவறாது

இந்த ரசிகரின் கருத்து இது.. துண்டு ஒரு முறைதான் தவறும்! After some struggles in first half... ரொனால்டோ Back to Back Goal in second half. 3-0 Portugal Won the match! என்று சிலாகித்துள்ளார். உண்மைதான்.. தனது தப்பை தானே சரி செய்ததோடு மட்டுமல்லாமல், சாதனையையும் சேர்த்து தட்டிக் கொண்டு போய் விட்டார் ரொனால்டோ.

 தண்ணியக் குடிங்க

தண்ணியக் குடிங்க

இது ரொனால்டோ மைதானத்துக்கு வெளியே விளையாடி கோல் அடித்ததை வைத்து போட்ட மீம்ஸ்.

- கொக்கோ கோலா குடிங்க நல்லது... .
- கொக்கோ கோலா எதில் தயாரிக்காங்க ...?
- தண்ணில தான்...

ரொனால்டோவைவைப் பிடிப்பது ஏன்

ரொனால்டோவைவைப் பிடிப்பது ஏன்

எங்களுக்கெல்லாம் ஏன் ரொனால்டோவைப் பிடிக்கிறது என்று கேட்டால், நல்லா புட்பால் விளையாடுகிறார் என்பதற்காக மட்டுமல்ல. இதற்கும்தான் என்று இந்த ரசிகர் பாராட்டியுள்ளார்.

இப்படியும் சிலர் உண்டு பாஸ்!

இப்படியும் சிலர் உண்டு பாஸ்!

ஒரு பக்கம் கால்பந்தை பலர் உதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்படியும் ஒரு குரூப் நேற்று உருண்டு கொண்டிருந்தது.. Football மேட்ச்ச டீவில கூட பாத்துருக்க மாட்டானுங்க ஆன ரொனால்டோ பிடிக்கும் மெஸ்ஸி பிடிக்கும்னு உருண்ட்டு இருக்கானுங்க என்று இவர் கலாய்த்துள்ளார்.

ஆக மொத்தம் ரொனால்டோ மைதானத்திலும், பிரஸ்மீட்டிலும் விளையாட.. அவரது ரசிகர்கள் டிவிட்டரில் புகுந்து விளையாடி விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+