போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்.. அஞ்சல் சேமிப்புகளில் இத்துணை பலன்களா? மத்திய அரசின் வரப்பிரசாதம்
சென்னை: தங்களின் பாதுகாப்புக்காகவும், வளமான எதிர்காலத்துக்காகவும், சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதில், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கேற்றார்பால், அஞ்சல் நிலையங்களும் பல்வேறு திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது. அதில் ஒருசிலவற்றை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதுபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம். சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், நீங்கள் முதலீடு செய்த பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும், பணப்பலனும், வட்டி விகிதமும், ஓய்வூதிய பலனும், முதலீட்டாளர்களுக்கு பன்மடங்கு நன்மையை தரக்கூடியது.

அபார திட்டங்கள்: இந்த திட்டத்தின் கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்து ஆண்டு தொடர் வைப்பு கணக்கு போன்ற 9 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 9 வகையான திட்டங்களுக்குமே மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
"பெண்கள் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்:" மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் எனப்படும் "பெண்கள் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" திட்டமானது, பெண் குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட திட்டமாகும். (Mahila Samman Savings Certificate) இதில், 3 மாதத்துக்கு ஒருமுறை வட்டி, கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் டெபாசிட் தொகை, முதலீடு செய்த தேதியிலிருந்து 2 வருடங்கள் கழித்து முதிர்வடையும்.
டெபாசிட் போட்டவர் 2 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டால், அப்போது முழுத்தொகையும் வழங்கப்பட்டு விடும். பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம்.. வயது வரம்பு எதுவும் கிடையாது. அதிகபட்சமாக ரூ. 2,0000 லட்சம் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS): அடுத்ததாக Senior Citizen Saving Scheme எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது... விஆர்எஸ் என்று சொல்லப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்... அதேபோல சூப்பர்ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றுக்கொண்ட நபர்களும் இந்த திட்டத்தை துவங்கலாம்.
எஸ்சிஎஸ்எஸ் கணக்கு தொடங்க, மூத்த குடிமக்கள் எதேனும் வங்கி அல்லது தபால் நிலையத்தை அணுகலாம். ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்ய விரும்புவோர் ரொக்கமாகவே டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் இருந்தால் காசோலை மூலமாகவே கணக்கைத் தொடங்க முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், தொகை 1000 மடங்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம். இந்த கணக்கில் ஒரு முறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 வருடங்களுக்கு பிறகு வைப்புத் தொகை முதிர்ச்சியடைகிறது.. ரூ.30 லட்சம் வரை சேமிக்கலாம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசாங்கம் வழங்கும் சிறு சேமிப்புத் திட்டம்தான் இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. இந்த சிறுசேமிப்புத் திட்டத்தில் மற்ற திட்டங்களை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம். குறைந்தபட்சம் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சமாக ஒருவருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
சேமிப்பு திட்டம்: நீங்கள் சேமிக்கும் செலுத்தக்கூடிய சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் நிறைவு பெறும். ஆனால் நீங்கள் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்புத் தொகையைச் செலுத்த முடியும்... நீங்கள் செலுத்தும் பணத்திற்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படும்...
நிலையான வைப்பு தொகை FD: இந்த திட்டத்தின்கீழ், வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது.. வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நாமே தேர்வு செய்துகொள்ளலாம்.. ஒருவேளை, முதிர்வு காலத்திற்கு முன்னரே வங்கியில் இருந்து திரும்ப பெற வேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.












Click it and Unblock the Notifications