வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்
சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்' சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான சோதனைகள் கர்நாடகாவின் மைசூர் மற்றும் பாகல்கோட்டை சர்க்கிளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
தற்போது நம் நாட்டில் மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை குறைத்து விட்டனர். பெட்டிக்கடை, டீக்கடை முதல் பெரிய பெரிய மால், கார் ஷோரூம் வரை அனைவரும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது அதிகரித்து விட்டது.

வங்கி கணக்கில் மட்டும் பணம் இருந்தால் போதும். செல்போனை எடுத்து கொண்டு எந்த கடைக்கு வேண்டுமானாலும் சென்று பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை ஒரு நிமிடத்துக்குள் விற்பனையாளரின் வங்கி கணக்கிற்கு மாற்றி விட முடியும்.
ஆனால் நாடு முழுவதும் மக்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் தபால் அலுவலகங்களில் இன்னும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தபால் நிலையங்களுக்கு செல்லும்போது கையில் பணம் வைத்திருக்க வேண்டிய நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.
இதனை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி யுபிஐ மூலமாக தபால் அலுவலகங்களில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
முன்னதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்த தபால் நிலையங்களில் QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் காரணமாக, இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்து மீண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications