ஃப்ளைட்லயே போயிறலாம் போலயே..தலைசுற்ற வைக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்! இந்த நம்பருக்கு போனை போடுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னைக்கு மக்கள் படையெடுப்பதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக புகாரளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி முதல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டது.

chennai pongal 2025 omni bus

கடந்த 15ஆம் தேதி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தினர். நேற்று முன் தினம் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதுவரை இல்லாத அளவு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நீண்ட விடுமுறை கிடைத்தது. 11, 12, சனி ஞாயிறு, 13 போகிப் பண்டிகை, 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினத்திற்காகவும், 16ஆம் தேதி காணும் பொங்கலை ஒட்டியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 ஆம் தேதி வேலை நாள் வந்தது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதியில் காரணமாக 18, 19 விடுமுறை நாட்களாக இருந்தது.

இந்த நிலையில் 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்னை வாசிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். இதனால் பொங்கலன்று சென்னை வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்த நிலையில் நாளையுடன் பொங்கல் விடுமுறை நிறைவடையும் நிலையில் பொதுமக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடைசி நேர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே போக்குவரத்து திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை போலீஸ்சாரும் கூறியிருந்தனர். இதை அடுத்து நேற்று முதல் சென்னைக்கு மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

நேற்று இரவு சென்னை நுழைவாயில் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மேலும் இன்றும் நாளையும் மக்கள் அதிகம் வருவார்கள் என்பதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போக்குவரத்திலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னைக்கு மக்கள் அதிக அளவில் வருவதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. வழக்கத்தை விட இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர். வழக்கமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு செல்ல 1200 ரூபாய் வரை வசூல் செய்யப்படும் நிலையில் தற்போது 3800 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. நெல்லையிலிருந்து சென்னைக்கு 3500-யும், மதுரையிலிருந்து சென்னைக்கு 1700 ரூபாய் வரை வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் கோவையிலிருந்து சென்னைக்கு செல்ல அதிகபட்சமாக 1900 ரூபாய் வரை கட்டண வசூலிக்கின்றனர் என குமுறுகின்றனர் பயணிகள். இந்த நிலையில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் கூற உதவி எண் 1800 425 6151-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 044-24749002,044-26280445, 044-044 - 26281611 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறியுள்ளனர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+