ஜெனரல் பவர் பத்திரம்.. பவர் மூலம் சொத்து வாங்கறீங்களா? பொது அதிகார பத்திரத்தில் இதெல்லாம் முக்கியம்
சென்னை: பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா? அதற்கான விதிமுறைகள், அதிகாரங்கள் என்னென்ன? தெரியுமா?
பொது அதிகார பத்திரம் என்பது, சம்பந்தப்பட்ட அதன் முகவராக உள்ளவருக்கு சம்பந்தப்பட்ட சொத்தை விற்கவும், நிலத்தை மனைப்பிரிவுகளாக ஆக்கவும், அரசு அலுவலகங்களில் சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பம் இடவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்..

பவர் பத்திரங்கள்: அதாவது, ஒரு வீடு அல்லது நிலத்தின் உரிமையாளர், தன்னால் செயல்படுத்த முடியாத அல்லது சரியாக பராமரிக்க முடியாத சொத்துக்களை, இன்னொருவருக்கு எழுதி கொடுக்கும் அதிகாரம்தான், பவர் பத்திரம் ஆகும். நம்முடைய நிலத்தை இன்னொருவர் வந்து ஆக்கிரமிப்பு செய்யும்போது, இந்த பவர் பத்திரம் தேவைப்படும்.
பவர் பத்திரம் எழுதி தருபவர்களை முதன்மையாளர் என்றும், பவர் பத்திரம் பெறப்படுபவரை முகவர் என்றும் சொல்வார்கள்.. ஆனால், முதன்மையாளர், தன்னுடைய முகவருக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்களை தன் சார்பாக செயல்பட வழங்க முடியும்..
முதன்மையாளர் மட்டுமே பவர் பத்திரத்தில் கையெழுத்திடுவது அவசியமாக இருந்த நிலையில், தற்போதெல்லாம் பவர் பத்திரத்தில் முதன்மையாளர் கையெழுத்துடன் சேர்த்து, அவர் நியமிக்கும் முகவரும் கையெழுத்திடுவது அவசியமாம்.
அதிகாரங்கள்: பொது அதிகார பத்திரம் (General Power Of Attorney) தனி அதிகார பத்திரம் (Limited Power Of Attorney) என்று இதில் 2 வகைகள் உள்ளன.. பொது அதிகார பத்திரம் என்பது அதன் முகவராக உள்ளவருக்கு சம்பந்தப்பட்ட சொத்தை விற்கவும், நிலத்தை மனைப்பிரிவுகளாக ஆக்கவும், அரசு அலுவலகங்களில் சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பம் இடவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்
ஆனால், தனி அதிகார பத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் தரப்பட்டிருக்கும். அதாவது, சொத்தை விற்பது அல்லது நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிப்பது போன்ற குறிப்பிட்ட செயலை தவிர வேறு எதையும் அவர் மேற்கொள்ள இயலாது.
அதேபோல, பவர் பத்திரத்தில், ஏதேனும் காலத்தை குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லுபடியாகும்.. ஆனால், முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும்..
கிரையம்: நீங்கள் அதிகாரம் கொடுக்கும் முகவர், உங்கள் நிலத்தை வேறு யாருக்காவது கிரையம் செய்திருந்தாலோ அல்லது கிரையம் செய்வதற்கான வேலையில் இறங்கியிருந்தாலோ, அந்த பவர் பத்திரத்தை முதன்மையானவர் எளிதாக ரத்து செய்துவிடலாம்.
சொத்தின் உரிமையாளர் அல்லது பவர் ஆப் அட்டர்னி மூலம் மட்டுமே அதிகார பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான நகல் வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பவர் ரத்து செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ளமுடியும்.
பதிவுத்துறை : காரணம், 2009 நவம்பர்-1 முதல் அதிகார பத்திரம் பதிவு செய்வதற்கான புதிய முறைகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிகார பத்திரம் தமிழகத்தில் எந்த சார்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சொத்து அமைந்துள்ள சார்பதிவு அலுவலகத்துக்கு அதன் விவரங்கள் அனுப்பப்படும்.
ஆனால், 2009 நவம்பர், 1ம் தேதிக்கு முன்பு, பதிவான பவர் பத்திரம் குறித்த விவரங்கள் வில்லங்க சான்றிதழில் இருக்காது. அதனால், பவர் பெற்றவரிடம் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் சமயத்தில் அது முறையாக ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்வது அவசியம்.
ஆவணங்கள்: இது எல்லாவற்றையும்விட முக்கியமானது, சொத்துக்களை பதிவு செய்யும்போது சில அடிப்படையான விஷயங்களை உற்று கவனிக்க வேண்டும்.. குறிப்பாக, எப்போதுமே எந்த ஒரு பத்திரம் வாங்கினாலும், அதற்குரிய ஆவணங்கள் இருக்கிறதா, அந்த ஆவணங்கள் அனைத்துமே முறையாக இருக்கிறதா என்பதை படித்து பார்த்துதான் கையெழுத்து போட வேண்டும்.
சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களை அந்தந்த சார்பதிவாளர்களிடமே தாக்கல் செய்யலாம் அல்லது அந்த சார்பதிவாளர் எந்த மாவட்ட பதிவாளரின் கீழ் பணியாற்றுகிறாரோ, அந்த மாவட்ட பதிவாளரிடம் பதிவு ஆவணத்தை தாக்கல் செய்யலாம். பதிவுத்துறை அலுவலகத்துக்கு செல்லும்போது, சில முக்கிய ஆவணங்களை கையோடு எடுத்து செல்ல வேண்டும்.
அசல் ஆவணம்: உதாரணத்துக்கு, தயாரிக்கப்பட்ட ஆவணம் அதாவது தன்னுடைய சொத்தை விற்பவரால் எழுதிக் கொடுக்கப்படும் அசல் ஆவணம் இருக்க வேண்டும்.. பட்டா மாற்றம் செய்வதற்கான விண்ணப்பம் மற்றும் அதற்கான நீதிமன்ற வில்லை தேவைப்படும்.. வீடு என்றால் விற்பவர், எழுதிக்காடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி போன்ற விவரங்கள் அவசியமாக தேவைப்படும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications