சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.. தி நகர் முதல் திருவேற்காடு வரை
சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை பகுதிகளான தி.நகர், கே.கே.நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம், திருவேற்காடு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும். பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னையில் 26.05.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தி.நகர்: பஜுல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமுலை அம்மான் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, ராமச்சந்திர ஐயர் தெரு, ராஜபிள்ளை தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, ரங்கராஜபுரம், அஜீஸ் நகர், அக்பராபாத், பராங்குசபுரம், சிஆர்பி கார்டன், மங்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை, ஸ்டேஷன் வியூ சாலை, பாரதி தெரு, திலக் தெரு.
தசரதபுரம்: காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், வெங்கடேச நகர், அருணாசலம் சாலை.
சாலிகிராமம் : குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை.
கே.கே. நகர்: பரணி காலனி, காவேரி மருத்துவமனை, சூரியா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம்.
விருகம்பாக்கம்: ஆற்காடு சாலை, என்.எஸ்.கே. லேன், ஷியாமளா டவர்.
சின்மயா நகர்: முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை.
திருவேற்காடு: ஆனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், விஜிஎன், அன்பு நகர்.
ஐயப்பன்தாங்கல்: மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ நகர், அம்மன் நகர், பி.ஜி அவென்யு, இந்திரா நகர், ஜானகியம்மன் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக மக்கள் இப்போது அதிக அளவில் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்கள். கோடைக்காலம் என்பதால் உச்சபட்ச மின்சார தேவை ஏற்பட்டுள்ளது. அந்த மின்சார தேவையை சமாளிக்கும் அளவிற்கு மின் கட்டமைப்புகள் எல்லா இடங்களிலும் இல்லை.. அதனால் அடிக்கடி மின்வயர்கள் பழுதாகி பவர் கட் ஏற்படுகிறது. அதேபோல் போதிய அளவு மின்சாரம் கிடைக்காத காரணத்தால், அதாவது குறைந்த மின் அழுத்தம் காரணமாகவும் சில பகுதிகளில் மின்சாரம் கட்டாகி வந்தது. இதனால் மக்கள் அடிக்கடி தெருவில் இறங்கி போராடவும் செய்தார்கள்.
-
மின் பற்றாக்குறை.. நீலகிரி டூ ஈரோடு .. சரியான நேரத்தில் பெரிய முடிவெடுத்த தமிழக அரசு -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications