உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி.. ஆனா உண்மையில மெழுகுவர்த்தி! புழுங்கும் புஸ்ஸி ஆனந்த்! தவெகவில் தனிமரமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தனிக்காட்டு ராஜாவாக வளம் வந்த புஸ்ஸி ஆனந்த் கடந்த சில வாரங்களாகவே கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டையன் வந்த பிறகு கட்சியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதோ என புஸ்ஸி ஆனந்த் புலம்புவதாக சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். செங்கோட்டையன் இணையும் போது ஆதவ் அர்ஜுனாவை அருகில் அழைத்த விஜய் ஆனந்தை கண்டு கொள்ளவில்லை எனவும் கூறுகின்றனர்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். விஜயின் அரசியல் ஆசை இன்று நேற்று வந்ததில்லை. பல ஆண்டுகாலமாகவே அது திட்டமிட்ட நடந்ததுதான். ஆரம்பத்தில் தன்னை நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள ரஜினிகாந்தை, ரெஃபரன்ஸாக பயன்படுத்தினார் விஜய்.
அரசியல் ஆசை வந்ததும் எம்ஜிஆரை பிரதானப்படுத்த தொடங்கினார். வசீகரா படத்தில் விஜயுடன் எம்ஜிஆர் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடுவது, விஜய் நடந்து வரும்போது பின்னணியில் எம்ஜிஆர் பாடல்கள் ஒலிப்பது என விஜய் தனது அரசியல் ஆசையை காட்டிக் கொண்டார்.

தவெக அரசியல்
தொடர்ந்து ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. அப்போது வரை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான் எல்லாமே. அதற்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் வந்ததும் நிலைமை தலைகீழானது. முழுக்க முழுக்க அரசியல் பயணத்தை நோக்கிய விஜய் மக்கள் இயக்கம் பயணித்தது. அதன் விளைவாக சந்திரசேகர் விஜய் இடையே இடைவெளி விழுந்தது. அதற்கு புஸ்ஸி ஆனந்து தான் காரணம் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
புஸ்ஸி ஆனந்த்
பிப்ரவரி மாதமே கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபரில் முதல் மாநில மாநாடு மூலம் அதிகாரப்பூர்வ அரசியலுக்கு வந்தார் விஜய். அதற்கு பிறகு இரண்டு மாநில மாநாடுகள் முடிவடைந்து விட்டது. அப்போது வரை விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த் மட்டும் தான் இருந்தார். அவரை தவிர வேறு யாரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் தமிழக மக்களுக்கு தெரியாது. இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் விஜய்க்கு அடுத்த இடத்தில் புஸ்ஸி ஆனந்த் இருந்தார்.
தலைமை போட்டி
ஆனால் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ்ம், இப்போது செங்கோட்டையன் என இரண்டாம் இடத்தை பிடிக்க பல தலைகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்குப் பிறகு அருண்ராஜ் வந்த போதும் அவர்கள் தனித்து ஊடகங்களில் பேசத் தொடங்கினர். ஆனால் ஊடகங்களை எதிர்கொள்ளத் தெரியாத ஆனந்த் இதனால் கடும் அதிருப்தி அடைந்தார். உச்சபட்சமாக செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த போது விஜய் தனக்கு அருகே வந்து நிற்குமாறு ஆதவ் அர்ஜுனாவை அழைத்தார். ஆனால் அவருக்கு மிக அருகில் நின்ற ஆனந்தை அழைக்கவில்லை. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டதையும் கவனிக்க வேண்டும்.
கொங்கு மண்டலம்
இதற்கிடையே சமீபமாக சமூக வலைதளங்களில் ஆனந்தை கொண்டாடி வந்த, கொங்கு மண்டல தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் தற்போது செங்கோட்டையன் பக்கம் தாவி விட்டனர். நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டு இருப்பதால் ஏற்கனவே பதவி பெற்றவர்களும் இனி பதவி பெற வேண்டும் என நினைப்பவர்களும் செங்கோட்டையனின் அலுவலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் வரை மாற்றி மாற்றி தினமும் தனக்கு போன் செய்த தொண்டர்கள் தற்போது கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில் ஆனந்த் இருக்கிறார் என்கிறார்கள் கொங்கு மண்டல நண்பா, நண்பீஸ்..
-
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்?












Click it and Unblock the Notifications