மதுரையில் மொட்டை மாடியில் நின்ற உருவம்.. அதே கொடுமை சென்னையில்.. வயதான தம்பதி மீது பாய்ந்த ராட்வீலர்
சென்னை: மதுரையில் மொட்டை மாடியில் ஜான்சியை கடித்து குதறியபோதே, பலரும் அலர்ட் ஆகாமல் விட்டுவிட்டனர்.. வீட்டில் நாய் வளர்க்க வேண்டுமானால், கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பிலும் அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தது. எனினும், சென்னையில், மீண்டும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
ராட்வீலர் நாய் என்பது ஜெர்மனியைச் சேர்ந்த வீட்டு நாய் இனமாகும்.. பார்ப்பதற்கு பெரிய உருவம் கொண்டது... இதன் மேல் தாடையில் 22, கீழ்தாடையில் 20 என, கத்திரிக்கோல் வடிவில் பல்வரிசைகள் இருக்கும்..

பெரிய உருவம் கொண்ட நாய்
பிற நாய்கள் ஆவேசமாகி கடிக்கும் வேகத்தைவிட, ராட் வீலர் நாய்கள் கடிக்கும் வேகமும் தீவிரமும் அதிகம் என்பார்கள்.. அதாவது, இந்த நாய் கடித்தால், மனிதனின் கை எலும்புகளே நொறுங்கி விடுமாம். அதுமட்டுமல்ல வீட்டில் இதை யார் வளர்க்கிறார்களோ, அவர்கள் மட்டும்தான் இந்த நாயை பராமரிக்க முடியும்.. அவர்கள்தான் உணவும் தர முடியும்.
யார் உணவு தருகிறார்களோ அவர்களுக்குதான் இந்த நாய் கட்டுப்படும்.. இயல்பாகவே, ராட் வீலர் நாய் இனங்கள் மிக மிக மூர்க்கமானவை என்கிறார்கள்.. அதனால்தான் அன்றைய காலங்களில் ராட்வீலர் நாய்கள், மாடு மேய்க்கும் நாய்களாக பயன்படுத்தப்பட்டதாம்.. இப்போது மனிதர்களுக்கு பலவகைகளில் உதவி கொண்டிருக்கிறது. முக்கியமாக போலீஸ் துறையில், தேடுதல் காப்பாற்றுதல், விழியிழந்தோருக்கு வழிகாட்டுதல் என எண்ணற்ற பணிகள் மூலம் உதவுகின்றன.
தமிழக அரசு விதித்த தடை
எனினும், சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு 5 வயது சிறுமியை இந்த இன நாய் கடித்து குதறிவிட்டது.. இதற்கு பிறகும்கூட, அடுத்தடுத்து பிள்ளைகளை விரட்டி கடித்துவிட்டது. அதனால்தான், நாய் வளர்க்க வேண்டுமானால், கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களை வளர்க்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி இதுபோன்ற நாய் வகைகளை சிலர் வளர்த்து வருகின்றனர்.
மொட்டை மாடியில் ஜான்சி
2 மாதங்களுக்கு முன்பு, மதுரை திருமங்கலத்தில் ஜான்சி ராணி என்பவர் ராட்வீலர் நாயைதான் செல்லமாக, வளர்த்து வருகிறார். மொட்டை மாடியில் நாய் வளர்த்து வந்துள்ளார்.. காய வைத்த துணியை எடுப்பதற்காக மொட்டை மாடிக்கு ஜான்சி சென்றுள்ளார்.. அப்போது நாய்க்கு அருகே கிடந்த துணியை ஜான்சி எடுக்க முயன்றபோது, ஜான்சியை கடித்து குதறியிருக்கிறது. கையிலுள்ள எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு சதைகளை குதறி எடுத்துவிட்டது..
ஜான்சி வலியால் அலறியபோதுகூட, இந்த நாய்க்கு பயந்துகொண்டு, யாருமே அவரை காப்பாற்ற மாடிக்கு செல்ல முடியவில்லை. ஜான்சியே ஒருவழியாக தப்பித்து கீழேவந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பயத்தில் கதறிய வயதான தம்பதி
இதோ சென்னையில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. சென்னை கொளத்தூர் புத்தாகரம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியான மாரியப்பனும், அவரது மனைவியும் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது ராட்வீலர் நாய் தொல்லை கொடுத்துள்ளது. இது குறித்து நாயின் உரிமையாளர் கவியரசனிடம் தட்டிக்கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கவியரசன், தன்னுடைய ராட்வீலர் நாயை ஏவி விட்டு வயதான தம்பதியை கடிக்க விட்டுள்ளார். ராட்வீலர் நாய் அந்த தம்பதியை கடிக்க துரத்தியபோது நாயை தடுக்காமல் கவியரசன் வேடிக்கை பார்த்துள்ளார். வயதான தம்பதியினரால் ஓடக்கூட முடியவில்லை.. அதனால் பயத்திலேயே அலறி கூச்சல் போட்டுள்ளனர்.. அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கவியரசனை கண்டித்திருக்கிறார்கள்.
சிசிடிவி வீடியோ அதிர்ச்சி
ஆனால், எனக்கு போலீஸ் உயர் அதிகாரிகளை தெரியும், பிரபலமான வழக்கறிஞர்களை தெரியும் என்றெல்லாம் சொல்லி அவர்களையும் கவியரசன் மிரட்டியுள்ளார்.
இதனிடையே இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கவியரசன் மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications