பிரபாகரன் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு- 16 ஆண்டுகளுக்கு பின் விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக 'விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபாகரன் மரணம் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை: உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே! எமது விடுதனை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந்தலைவருமான பிரபாகரன், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதி தளராது 36 ஆண்டுகளாக எதிரிப் படைகளோடு அடிபணியாது போராடி நந்திக் கடலோரம் நடைபெற்ற இறுதிச் சமரில் வீரகாவியமானார்.

இலங்கை அரசுக்கும் அதன் ராணுவ இயந்திரத்துக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சித் திட்டங்களையும் எதிர்கொண்டு அனைத்து தடைகளையும் தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக பிரபாகரன் திகழ்கின்றார்.

தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது.
பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயரமிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும் ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு, சிதைந்து கொண்டிருந்த ஈழத் தமிழினத்துக்கு கிடைத்த ஒரு சூரியத் தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து தமிழினத்தின் அதி உச்சவீர அடையாளமாக பிரபாகரன் திகழ்கிறார்.
எமது அன்பிற்குரிய தாய்த் தமிழ் உறவுகளே!
தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்தில் இருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குகள் உடைத்து கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதி தளராது போராடிய பிரபாகரன், மாவீரர் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழினத்தின் விடிவுக்காக, தமது உயிரை அர்ப்பணித்த எமது தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு நெஞ்சங்களில் இருத்தி, தமிழீழப் போராட்ட வரலாற்றின் மிகப் பெரும் அடையாளமாக எமது இதயக் கோவில்களில் வைத்து பூசிக்கப்படக் கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது மிகப் பெரும் கடமையும் பொறுப்புமாகும்.

ஆகவே, வரலாற்றில் எமக்குக் கிடைத்த பொக்கிசமான, பிரபாகரனுக்கு அவரது வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம் பெயர் தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பு எங்கும், நடத்துகிற அதேவேளையில் அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடு ஒன்றில் 2025-ம் ஆண்டு நடுப்பகுதியில், உலகம் போற்றும் பேரெழுச்சியாக முன்னெடுக்க இருக்கிறோம்.
எங்கள் பெருந்தலைவர் பிரபாகரனால் கட்டமைத்து வளர்க்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக் கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோம் என பிரபாகரன் மீது மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications