பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டம்.. பயனாளிகளுக்கு குட் நியூஸ்.. மீண்டும் தொடங்குகிறது சர்வே
சென்னை: பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக வீடுகள் கட்டப்படாமல் உள்ள நிலையில், இந்த திட்டத்தை 2028 - 29 வரை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பயனாளிகள் கணக்கெடுப்பை புதிதாக நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம். இந்த திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட நிதி உதவி அளிக்கப்படுகிறது.

கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை போக்குவதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதே இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் நோக்கமாகும். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தையே அடியோடு மாற்றி, அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதாக, மத்திய அரசு உத்தரவாதம் தந்து, இந்த திட்டத்தினை துவங்கியது.
இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில் 1.31 லட்சமும் மாநில அரசு சார்பில் 1.72 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 2.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள சூழலில், இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு.
2028 - 2029 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் கணக்கெடுப்பை புதிதாக நடத்துமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதில் விதிகளும் மாற்றப்பட்டு இருக்கின்றன. இதன்படி பார்த்தால், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள், தகுதியில்லாதவர்களாக இருந்தால் நீக்க வேண்டும்..
தகுதி வாய்ந்த புதிய பயனாளிகளை சேர்த்தல் வேண்டும். இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆப்-ல் பயனாளிகளை புகைப்படம் எடுத்து அவருடைய விவரங்களை சேர்க்க வேண்டும்.. இருசக்கர வாகனங்கள் தவிர்த்து பிற வாகனங்கள் அதாவது 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்து இருந்தால் பயனாளிகளாக சேர்க்க கூடாது.. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள வரம்பில் கிசான் அட்டை வைத்திருப்பவர்கள்;
குடும்பத்தில் யாராவது அரசு பணியில் இருந்தால்... அவர்களை பயனாளிகளாக சேர்க்க முடியாது. அதேபோல, குடும்ப உறுப்பினர் யாராவது மாத ஊதியம் 15 ஆயிரத்திற்கு மேல் வாங்கினால் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக முடியாது. தொழில் வரி, வருமான வரி செலுத்துபவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் வீடு கிடைக்காது. 2.5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ... பாசனம் இல்லாத நிலமாக இருந்தால் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் வைத்திருந்தாலோ பயனாளியாக முடியாது. இத்திட்டத்தில் 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications