பிரதான் மந்திரி இ பஸ் சேவை.. தமிழகத்தில் "டிக்" ஆன 11 மேஜர் நகரங்கள்.. மத்திய அரசு தந்த வரப்பிரசாதம்
சென்னை: தமிழக போக்குவரத்து துறை பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டுவரும் நிலையில், மத்திய அரசும் இன்னொரு குட்நியூஸ் சொல்லி உள்ளது. அதன்படி, மத்திய அரசின் எலக்ட்ரிக் பஸ் எனப்படும் மின்சார பஸ்களை இயக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், பிரதம மந்திரி இ-பஸ் சேவை திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
எலக்ட்ரிக் பஸ்கள்: அந்தவகையில், எலக்ட்ரிக் பஸ்கள் எனப்படும் மின்சாரத்தால் இயங்கும் இ-பஸ்களை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் "பிரதான்மந்திரி இ-பஸ் சேவை" திட்டத்திற்கு ஒப்புதலும் தரப்பட்டு, ரூ.57 ஆயிரம் 613 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதையடுத்து, 10 ஆயிரம் எலக்ட்ரிக் ஏசி பஸ்களை பல்வேறு நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 2 முக்கியமான அம்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.. ஒன்று, டவுன் பஸ் சேவையை விரிவுபடுத்துவது, மற்றொன்று சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை நகர்ப்புற சேவையை அளிப்பது.
இதனால், நாம் நாட்டில் பொது போக்குவரத்தின் பயன்பாட்டை வெகுவாக அதிகரிக்கும் என்பதுடன், பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான தேசத்தின் பாதையும் முக்கியத்துவம் பெறும் என்று நம்பப்படுகிறது.
பிரதான் மந்திரி: இந்த பிரதம மந்திரியின் இ-பஸ் சேவை திட்டமானது, 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், முக்கியமாக வரைமுறை செய்யப்படாத பஸ் சேவைகள் இருக்கும் மாநகரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது..
இதில், முதற்கட்டமாக இ-பஸ்கள் இயக்க தகுதியான 169 மாநகரங்களை 4 பிரிவாக தேர்வு செய்து மத்திய அரசு லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு மாநிலங்களில், தனியார் பங்களிப்புடன் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த போகிறது. இதில் நம்முடைய தமிழகமும் அடக்கமாகும்.. திருச்சி உள்பட 11 நகரங்களில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த மத்தியஅரசு தேர்வு செய்துள்ளது,..
இ-பஸ்கள்: தமிழகத்தில் 150 இ-பஸ்கள் இயக்க 20 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் கோவை மாநகரமும், 100 இ-பஸ்கள் இயக்க 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் திருச்சி, மதுரை மாநகரங்களும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் ஈரோடு, சேலம், திருப்பூர் மாநகரங்களும் இடம்பெற்றுள்ளன.

அடுத்தபடியாக 5 லட்சம் மற்றும் அதற்கு கீழ் மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் நகரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்திற்கு ஸ்டாண்டர்டு, மிடில், மினி என 3 பிரிவுகளில் கிலோ மீட்டர் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்க போகிறது.. அநேகமாக இந்த திட்டம் அடுத்த 10 வருங்களுக்குள் அல்லது 2037ம் ஆண்டு வரை மார்ச் மாதம் வரை பயன்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: ஆக, தமிழகத்தில் மொத்தம் 11 நகரங்களில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!











Click it and Unblock the Notifications